நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புகையிலை, பான் மசாலாவுக்கு புதிய வரி விதிக்க, மசோதாவை தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்!!

புதுடெல்லி,
இந்தியாவில் நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரி விகிதம் 5, 18 என, இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது.

அதே நேரத்தில், சிகரெட், புகையிலை பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும், 40 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இதன் பிறகு, கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது, தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விலைகள் குறையாமல் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தீவிரம் காட்டியது.

இதன்படி, இன்று தொடங்கியுள்ள நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, இதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், புகையிலை, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க ஏதுவாக கலால் வரி விதிக்கும் வகையில், 2 மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார். ஜிஎஸ்டி செஸ் வரிக்கு மாற்றாக இந்த கலால் வரி விதிக்கப்படும்.

இந்த வரியானது சிகரெட், மெல்லும் புகையிலை பொருட்கள், ஹூக்காக்கள் ஆகியவற்றிற்கு விதிக்கப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், 40 சதவீத ஜிஎஸ்டி மற்றும் உற்பத்தி வரி ஆகியவை விதிக்கப்படும்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: புகையிலை மற்றும் பான் மசாலா மூலம் கிடைக்கும் வருமானத்தை சுகாதாரம், தேசிய பாதுகாப்பை மேம்படுத்த அரசாங்கம் பயன்படுத்தும். நுகர்வோருக்கு விலைகள் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்வதே யோசனை.

இது வருவாயை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கை கிடையாது” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *