சா​தி​வாரி மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பு, வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத இடஒதுக்​கீடு கோரி ராமதாஸ் தலை​மை​யில் சென்​னை​யில் ஆர்ப்பாட்டம்!!

சென்னை:
சா​தி​வாரி மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பு, வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத இடஒதுக்​கீடு கோரி ராமதாஸ் தலை​மை​யில் சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

சாதி​வாரி மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு நடத்த வேண்​டும். வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத இடஒதுக்​கீடு சட்​டத்தை நடை​முறைப்​படுத்த வேண்​டும்.

அனைத்து சாதி​யினருக்​கும் உரிய இடஒதுக்​கீடு வழங்க வேண்​டும் என்று கோரி பாமக, வன்​னியர் சங்​கம் சார்​பில் சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் ஸ்டேடி​யம் அரு​கில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை பெற்றது.

பாமக நிறு​வனர் ராம​தாஸ் தலை​மை​யில் நடந்த ஆர்ப்​பாட்​டத்​தில், அவரது மகளும் செயல் தலை​வரு​மான ஸ்ரீகாந்​தி, கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி உள்​ளிட்ட நிர்​வாகி​கள் பங்​கேற்​றனர். இதே​போல், தமிழகம் முழு​வதும் ஆர்ப்​பாட்​டங்​கள் நடை​பெற்​றன.

சென்​னை​யில் நடந்த ஆர்ப்​பாட்​டத்​தில் ராம​தாஸ் பேசி​ய​தாவது: 324 சமு​தா​யங்​களும் வாழ வேண்​டும் என்று பல்​வேறு போராட்​டங்​களை நடத்​தி​ இருக்​கிறோம். தமிழகம்​தான் இந்​தி​யா​வுக்கு சமூகநீ​தி​யின் வழி​காட்டி என்று சொல்​கிறோம்.

இடஒதுக்​கீடு வழங்​கி​னால் அந்த பெருமை முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்​கு​தான் கிடைக்​கும். இட ஒதுக்​கீட்​டுக்​காக நாங்​கள் எவ்​வளவோ செய்​து​விட்​டோம். இதற்கு மேல் ஏதாவது செய்​தால், அது மக்​களை பாதிக்​கும்.

பாமக என்​பது ஒரே கட்​சி​தான்: தேர்​தல் வரக்​கூடிய இந்த நேரத்​தில் இடஒதுக்​கீடு கொடுத்​தால், ஆளுங்​கட்​சிக்​கு​தானே நன்மை கிடைக்​கும். அதை செய்ய எது தடுக்​கிறது? சாதி​வாரி மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்தி இடஒதுக்​கீடு வழங்க முதல்​வர் உத்​தர​விட வேண்​டும்.

இதனால், எல்லா சமு​தாய​மும் மகிழ்ச்சி அடை​யும். எனவே, சாதி​வாரி கணக்​கெடுப்பை உடனே நடத்​துங்​கள். இருக்​கும் புள்​ளி​விவரங்​களின் அடிப்​படை​யில் சரி​யான இடஒதுக்​கீட்டை இம்​மாத இறு​திக்​குள் பகிர்ந்து கொடுங்​கள். பாமக என்​பது ஒரே ஒரு கட்​சி​தான்.

அது, இது என்று சொல்லி ஏமாற்​று​வார்​கள். மக்​கள் ஏமாற​மாட்​டார்​கள். எங்​களுக்கு வேஷம் போடத் தெரி​யாது. இவ்​வாறு அவர் பேசி​னார். ராம​தாஸ் மகள் ஸ்ரீகாந்தி பேசும்​போது, “ராம​தாஸ்​தான் நம்​முடையே ஒரே தலை​வர்.

இதற்​கிடையே ‘நான்​தான் தலை​வர், தலை​வி’ என்று கூறிக்​கொண்டு சொகுசு பயணம் செய்​பவர்​கள் மத்​தி​யில், 50 ஆண்​டு​களுக்​கும் மேலாக நடந்தே கிராமங்​கள்​தோறும் சென்று இயக்​கத்தை கட்​டிக்​காத்​தவர் ராம​தாஸ்.

அவரை மறந்​து​விட்​டு, கட்​சியை பிளவுப்​படுத்தி வரு​கிறார்​கள். இதனை முறியடிக்க ராம​தாஸ் கரத்​தை வலுப்​படுத்​தவேண்​டும்​” என்​றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *