தியானத்தால் ஒரு மனிதனின் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன!!

தியானம் பல நாடுகளில் பல்வேறு வடிவங்களில் பயிற்சியாக கற்று தரப்படுகிறது. இந்த தியானத்தால் ஒரு மனிதனின் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு நோய்களை போக்க தியானம் ஒரு சிறந்த வழி என்று மருத்துவர்கள் கூட பரிந்துரைக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, ஒருவர் அல்லது ஒரு குழு செய்யும் தியானம் என்ன மாதிரியான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்துகிறது என்று ஆய்வு செய்ய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.


ஆழ்நிலை தியானத்தில் பயிற்சி பெற்ற பலரை பல்வேறு நகரங்களில் குழுவாக தியானம் செய்ய வைத்தனர். பின்னர் இந்த தியான நிகழ்வு நடைபெற்ற நகரங்களில் அந்த தியான நிகழ்வுக்கு முன் பின் நடைபெற்ற சம்பவங்களை ஆய்வு செய்தனர்.

அதில், இந்த தியான நிகழ்வுக்கு பிறகு அந்த நகரங்களில் குற்றம், வன்முறை சம்பவங்கள், விபத்துகள், நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

இது போன்ற மாற்றங்களுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் விவாதித்தனர்.

அதில், தோராயமாக ஒரு நகரில் வெறும் 1 சதவீத மக்கள் தொடர்ந்து தியானம் செய்தால், அந்த இடத்தில் இருந்து பரவும் கண்ணுக்கு தெரியாத அமைதி அலைகள் அந்த நகரைச் சுற்றி சுமார் 5 மைல் தொலைவுக்கு ஒரு வித அமைதியை அந்த பகுதியில் வாழும் மனிதர்களிடத்தில் ஏற்படுத்துகிறது.

இது அந்த பகுதியில் வாழும் தியானத்தில் ஈடுபடாத மக்களின் மனதில் மாற்றத்தை உருவாக்கி அமைதியை உருவாக்குவதால் அந்த மக்களின் மன அழுத்தம் குறையத் தொடங்குகிறது. பொதுவாக மனிதர்கள் ஒருவரையொருவர் ஏதோ ஒரு வகையில் பாதிக்கின்றனர்.

ஒரு மனிதரிடம் நல்ல உணர்வுகள் வெளிப்படும் போது அது சக மனிதர்களை அமைதிப்படுத்துகிறது என்பது உண்மை. பொதுவாக தியானம் அமைதியை தருகிறது. அது ஒரு சமூகத்தில் பரவும் போது ஒட்டுமொத்த சமூகமும் அமைதிக்கு திரும்புகிறது என்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *