இந்​தி​யா​வின் பதிப்பக தலைநக​ராக சென்னை உயர்ந்​துள்​ளது – பெரு​மிதத்​துடன் தெரி​வித்​த துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்!!

சென்னை:
இந்​தி​யா​வின் பதிப்பக தலைநக​ராக சென்னை உயர்ந்​துள்​ளது என துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பெரு​மிதத்​துடன் தெரி​வித்​தார்.

தென்​னிந்​திய புத்தக விற்​பனை​யாளர்​கள் மற்​றும் பதிப்​பாளர்​கள் சங்​கத்​தின் (பபாசி) சார்​பில், 49-வது சென்னை புத்​தகக்காட்​சி, நந்​தனம் ஒய்​எம்​சிஏ மைதானத்​தில் ஜனவரி 8-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது.

இந்​நிலை​யில், இந்த ஆண்​டுக்​கான பபாசி விருதுகள் வழங்​கும் விழா, புத்​தகக் காட்சி வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் விருதுகளை வழங்​கி​னார்.

சிறந்த பதிப்​பாள​ருக்​கான பதிப்​பகச் செம்​மல் க.கணபதி விருது – ஐந்​திணை பதிப்​பகம், சிறந்த நூல​கருக்​கான பூங்​கொடி வே.சுப்​பையா விருது – எஸ்.வனஜா (அண்ணா நூற்​றாண்டு நூல​கம்), சிறந்த குழந்தை எழுத்​தாள​ருக்​கான குழந்தை கவிஞர் அழ.வள்​ளியப்பா விருது – மு.​முரு​கேஷ், சிறந்த எழுத்​தாள​ருக்​கான முதல் பெண் பதிப்​பாளர் அம்​சவேணி பெரியண்​ணன் விருது – ஜா.தீ​பா, சிறந்த சிறு​வர் அறி​வியல் நூலுக்​கான நெல்லை சு.​முத்து விருது – அ.லோகமா தேவி, முத்​தமிழ்க் கவிஞர் ஆலந்​தூர் கோ.மோக​னரங்​கன் கவிதை இலக்​கிய விருது – செ.​பா. சிவ​ராசன், சிறந்த தன்​னம்​பிக்கை நூலுக்​கான சிந்​தனைக் கவிஞர் கவி​தாசன் விருது – முனை​வர் சுந்தர ஆவுடையப்​பன் ஆகியோ​ருக்கு வழங்​கப்​பட்​டன.

தொடர்ந்து துணை முதல்​வர் உதயநிதி பேசி​ய​தாவது: கடந்த 1977-ம் ஆண்டு வெறும் 13 அரங்​கு​களு​டன் தொடங்​கப்​பட்ட சென்னை புத்​தகக் காட்சி அடுத்த ஆண்டு பொன்​விழா கொண்​டாட​வுள்​ளது பாராட்​டுக்​குரியது.

இந்த ஆண்டு புத்​தகக் காட்சி அரங்​கு​களை பார்​வை​யிட வாசகர்​கள் இலவச​மாக அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர்.

இதற்​காக வாசகர்​கள் சார்​பில் பபாசிக்கு பாராட்​டு​களை தெரி​வித்​துக் கொள்​கிறேன். துணை முதல்​வர் உட்பட எத்​தனையோ பொறுப்​பு​களில் இருந்​தா​லும் ஒரு பதிப்​பாளர் என்ற முறை​யில் இந்த புத்​தகக்காட்​சி​யில் பங்​கேற்​ப​தில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சில ஆண்​டு​களுக்கு முன்பு சென்னையில் விடு​முறை நாட்​களில் திரையரங்​கு, பெரும் வணிக வளாகங்​களில்​தான் பொது​மக்​கள் அதி​கம் கூடு​வர்.

ஆனால், அண்​மைக்​கால​மாக சென்​னை​யில் புத்​தகக் காட்சி தொடங்கி விட்​டால் மக்​கள் தங்​கள் குடும்​பத்​துடன் திரளாக வரு​வதை பார்க்க முடிகிறது.

ஒரு​புறம் சென்னை புத்​தகக் காட்சி நடை​பெற்று வரு​கிறது. மற்​றொரு புறம் பன்​னாட்டு புத்​தகக் காட்சி ஞாயிற்​றுக்​கிழமை நிறைவடைந்​துள்​ளது. இவ்​வாறாக சென்னை இந்​தி​யா​வின் பதிப்​பகத் தலைநக​ராக (பப்​ளிஷிங் கேப்​பிடல்) உயர்ந்​திருக்​கிறது.

இவ்​வாறு அவர் பேசி​னார். விழா​வில் அமைச்சர்​கள் அன்​பில் மகேஷ் பொய்​யா மொழி, மா.சுப்​ரமணி​யன், பபாசி நிர்​வாகி​கள் கலந்​து கொண்​டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *