குருகிராம், சென்னை, பெங்களூரு & திண்டுக்கல் ஆய்வகங்ளில் 4 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்கிறது ஆம்வே…

சேலம், :

ஆரோக்கியத்துக்கும் நல்வாழ்வுக்கும் அதி நவீன மேம்பாடுகளை வழங்குவதற்கான
அறிவியல் திறன்களை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்து ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை நோக்கமாகக்கொண்ட உலகளாவிய நிறுவனமான ஆம்வே 4 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் தனது நான்கு அதி நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களை முறைப்படி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் ஆரோக்கியத்துக்கும் நல் வாழ்க்கைக்கும் உதவுவதை நோக்கமாகக் கொண்டு மேம்பட்ட தொழில்நுட்பம், சமகால அறிவியல் மற்றும் விஞ்ஞான சிந்தனையுடன் கூடிய தலைமைப் பண்பு ஆகியவற்றை பயன்படுத்தி இந்த ஆய்வகங்கள் பாதுகாப்பான, பலனளிக்கும், பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் அதியுயர் தரம் கொண்ட ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்க்கைக்கான தயாரிப்புகளை மறு வரையறை செய்ய ஆயத்தமாக உள்ளன.

இது உலகம் முழுவதும் உள்ள ஆம்வேயின் ஆர்&டி மையங்களில் ஒன்றாகும். இந்தியாவில் ஆம்வேயின் நான்கு அதி நவீன ஆர்&டி ஆய்வகங்கள் குருகிராம், சென்னை, பெங்களூரு மற்றும் திண்டுக்கல்லில் 24,700 சதுர அடிபரப்பளவில் அமைந்துள்ளன.

ஆம்வே இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ரஜ்னீஷ்சோப்ரா, ஆம்வே இந்தியாவின் முதலீட்டை பற்றிபேசும் போது;

“இந்த முதலீடு ஆம்வே இந்தியாவின் தயாரிப்புகளை மேம்படுத்தும் திறன்களை விரைவுபடுத்துகிறது.. இந்த முதலீடு நாட்டின் நிபுணத்துவம் மற்றும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஆற்றலில் ஆம்வேக்கு இருக்கும் நம்பிக்கையை வலியுறுத்திக் காட்டுகிறது.

” இந்தியாவில் இருக்கும் ஆர்&டி ஆய்வகங்களில் முதலீடு செய்வது உள்ளூர் சந்தை மற்றும் உலகளாவிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையும். மேலும் புதிய கண்டுபிடிப்புகள், தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி, பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு தொடர்பான நிறுவனத்தின் முயற்சிகளை மேலும் உறுதிப்படுத்தும்.

உணவு, ஓரல் சாலிட், அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்புத் துறைகளில் ஊட்டச்சத்து மற்றும் சருமத் தேவைகளுக்கான தாவர மூலப்பொருட்கள் அடங்கிய புராடக்ட்களை இந்த ஆய்வகங்கள் புத்தாக்கம் செய்யும். என்றார்.

இந்தியாவில் இருக்கும் ஆர்&டி ஆய்வகங்களை அறிமுகப்படுத்திய ஆம்வே இந்தியாவின் இன்னோவேஷன் அண்ட் சயின்ஸ், இந்தியா மற்றும் எஸ்இ ஏஷியா மார்க்கட்ஸ் இயக்குநர் டாக்டர். ஷியாம் ராமகிருஷ்ணன்;

“உலகளவில் ஆரோக்கியம்,நல்வாழ்வு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் அதிந வீன ஆர்&டி ஆய்வகங்களில் செய்யப்படும் இந்த முதலீடு உலகளாவிய சந்தைகளில் வளர்ந்து வரும் நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முன் முயற்சி ஆகும் என்றார் .

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *