புதுடெல்லி:
கேரள சட்டப்பேரவைக்கு ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளா செல்கிறார்.
இந்தப் பயணத்தின்போது, திருவனந்தபுரத்தில் உள்ள சிஎஸ்ஐஆர்-என்ஐஐஎஸ்டி வளாகத்தில் அமையவுள்ள புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மையத்துக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
அத்துடன் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் உட்பட 4 புதிய ரயில் சேவைகளையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
இது தவிர, திருவனந்தபுரத்தில் ஒரு நவீன தபால் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.