சென்னை:
சிவகார்த்திகேயன் நடித்த, ‘மாவீரன்’, சித்தார்த் நடித்த ‘3பிஹெச்கே’ போன்ற படங்களைத் தொடர்ந்து, விக்ரம் நடிக்கும் அவருடைய 63-வது படத்தைச் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார் அருண் விஸ்வா.
இந்நிலையில், அவர் தனது 4-வது படத்தை அறிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்கும் இப்படத்தில் பாரத் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ‘குடும்பஸ்தன்’ சான்வி மேக்னாவும் நடிக்கின்றனர்.
பால சரவணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதன் படப்பிடிப்பை, பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.