வருகிற 30-ந்தேதி ‘க்ராணி’ திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு!!

சென்னை:
நகுல், பாக்யராஜ், நீது சந்திரா மற்றும் ஆஷ்னா ஜவேரி ஆகியோர் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘பிரம்மா.காம்’ படத்தை இயக்கிய விஜயகுமாரன் தற்போது இயக்கி உள்ள படம் ‘க்ராணி’ (Granny).


இப்படத்தில் பழம்பெரும் நடிகை வடிவுக்கரசி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிங்கம் புலி, திலீபன், ஜீவி அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சீ.டா. பாண்டியன் இசையமைத்துள்ளார்.

ஹாரர் திரில்லராக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை விஜயா மேரி யுனிவர்சல் மீடியா’ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயா மேரி தயாரித்து உள்ளார். இப்படம் தொடர்பாக ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இந்த நிலையில், ‘க்ராணி’ படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இப்படம் வருகிற 30-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *