திருப்​ப​தி​யில் இனி சாமானிய பக்​தர்​களுக்கே முன்னுரிமை வழங்​கப்​படும்; திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால்…….

திருப்பதி:
திருப்​ப​தி​யில் இனி சாமானிய பக்​தர்​களுக்கே முன்னுரிமை வழங்​கப்​படும் என்று நேற்று நடந்த குடியரசு தின விழா​வில் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் தெரி​வித்​தார்.

77-வது குடியரசு தின விழா​வினையொட்​டி, நேற்று திருப்​ப​தி​யில் உள்ள தேவஸ்​தான தலைமை அலு​வல​கத்​தில், நிர்​வாக அதி​காரி அனில்​ கு​மார் சிங்​கால் ஐஏஎஸ், தேசிய கொடியேற்றி பேசியதாவது:

உலக பிரசித்தி பெற்ற தார்​மீக அறக்கட்டளையான திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் சாமானியர்​களுக்கு முன்​னுரிமை வழங்க பல்​வேறு நடவடிக்கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

கடந்த ஆண்டு நடந்த பிரம்​மோற்​சவத்தை வெற்​றிகர​மாக நடத்​தினோம். அதில் 28 மாநிலங்​களை சேர்ந்த 6,976 கலைஞர்​கள் பங்​கேற்று வெகு சிறப்​பாக நிகழ்ச்​சிகளை நடத்​தினர்.

முதன்​முதலாக இந்த முறை வைகுண்ட ஏகாதசிக்கு முதல் 3 நாட்​கள் குலுக்​கல் முறை​யில் ஆன்​லைன் டிக்​கெட்​டு​களை வழங்​கி, சிறப்​பாக தரிசன ஏற்​பாடு​களை செய்​தோம்.

மீத​முள்ள 7 நாட்​களும் சாமானிய பக்​தர்​களுக்கே முன்​னுரிமை வழங்​கப்​பட்​டது. 10 நாட்​களில் 7.83 லட்​சம் பக்​தர்கள் சுவாமியை தரிசித்தனர். இதேபோல் ரத சப்​தமிக்​கும் சுமார் 3 லட்​சம் பக்​தர்​கள் வாகன சேவை​களை கண்​டு​களித்​தனர்.

1985-ல் முதன் முறையாக பக்​தர்​களுக்கு அன்​ன​தானம் வழங்​கினோம். தற்போது தின​மும் சராசரி​யாக 2 லட்​சம் பக்​தர்​களுக்கு தரமான அன்​னபிர​சாதம் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

மாநிலத்​தில் எஸ்​சி, எஸ்​டி, பிசி காலனிகளில் 5,000 ஸ்ரீநி​வாசர் திருக்​கோ​யில்​கள் கட்ட நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வருகின்றன. இதற்​காக ரூ.750 கோடி நிதி ஒதுக்​கீடு செய்யப்பட்டுள்​ளது.

கோய​முத்​தூர், மும்​பை, கர்​நாட​கா, அசாம், உள்​ளிட்ட இடங்​களில் வரும் ஜூன் மாதத்​திற்​குள் ஏழு​மலை​யான் கோயில் கட்ட பூமி பூஜை நடத்​தப்​படும்.

கோய​முத்​தூரில் ரூ.300 கோடி​யில் ஏழு​மலை​யான் கோயில் கட்ட நிதி உதவி செய்ய ஒரு பக்​தர் முன் வந்​துள்​ளார்.

அலிபிரி அருகே ரூ.460 கோடி செல​வில் ஒருங்​கிணைப்பு டவுன் ஷிப் கட்​டப்​படும். இவ்வாறு அவர் பேசி​னார்.

பின்​னர் சிறப்​பாக பணி​யாற்​றிய 31 தேவஸ்​தான அதி​காரி​கள், 266 ஊழியர்​களுக்கு தலா 5 கிராம் வெள்ளி பதக்​க​மும், நற்​சான்​றிதழும் வழங்கி கவுரவிக்​கப்​பட்​டது.

பாது​காப்பு பிரி​வில் பணி​யாற்​றும் மோப்ப நாய்​களின் சாகச நிகழ்ச்​சிகளும், தேவஸ்​தான பள்​ளி, கல்​லூரி​களில் படிக்​கும் மாணவி​களின் கலை நிகழ்ச்சிகளும் நடை​பெற்​றன.

அமராவ​தி​யில்..: ஆந்​திர தலைநகர் அமராவ​தி​யில் முதன் முறை​யாக நேற்று குடியரசு தின​விழா கொண்​டாடப்​பட்​டது.

ஆளுநர் அப்​துல் நசீர் தேசிய கொடியேற்றி உரை​யாற்​றி​னார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு பங்கேற்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *