கொல்கத்தா:
சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், அவர்களது குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவுக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை தலைமைச் செயலகத்தில் அகிலேஷ் யாதவ் நேற்று மதியம் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: சகோதரி (மம்தா) அமலாக்கத் துறையை வீழ்த்தியுள்ளார், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் பாஜகவை மீண்டும் தோற்கடிப்பார் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
எங்களுடைய சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்புதான். அரசியல் எதுவும் இல்லை.
மம்தா அன்பு, சகோதரத்துவத்தைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் பாஜக பிளவுபடுத்தும் அரசியலை முன்னெடுத்து வருகிறது.
பாஜக, சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் மூலம் தனது வாக்குகளை அதிகரிக்க முயற்சிக்கவில்லை.
ஆனால், பாஜகவின் எதிர்ப்பாளர்களின் வாக்குகளைக் குறைக்க அக்கட்சி முயற்சிக்கிறது. ஜனநாயகத்தைக் காப்பாற்ற மம்தா எடுக்கும் முயற்சிகளுக்கு துணை நிற்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.