முன்​னாள் மாணவர்​கள், அரசுப் பள்ளிகளின் வளர்ச்​சிக்கு பக்​கபல​மாக இருக்க வேண்​டும் – அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தல்!!

சென்னை: ​
முன்​னாள் மாணவர்​கள், அரசுப் பள்ளிகளின் வளர்ச்​சிக்கு பக்​கபல​மாக இருக்க வேண்​டும் என்​று, அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​தார்.

சென்​னை, அசோக்​நகர், தகை​சால் அரசு மகளிர் மேல்​நிலைப் பள்ளியில் ரூ.11.90 கோடி​யில் 40 கூடு​தல் வகுப்​பறை​களு​டன் புதிய கட்​டிடங்​கள் கட்​டப்​பட்​டுள்​ளன.

இதன் திறப்பு விழா நேற்று நடை​பெற்​றது. இதில் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், கட்​டிடத்தை ரிப்​பன் வெட்டி திறந்து வைத்​தார்.

இதில், பள்ளிக் கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி, செயலர் பி.சந்​திரமோகன், இயக்​குநர் ச.கண்​ணப்​பன், தொடக்​கக் கல்வி இயக்​குநர் பூ.அ.நரேஷ் உள்​ளிட்​டோர் கலந்​து கொண்​டனர்.

அதைத் தொடர்ந்​து, அரசு பள்ளி தூது​வர் திட்​டத்​தின் தொடக்க விழா நடை​பெற்​றது. இந்த திட்​டத்தை அமைச்​சர் அன்​பில் மகேஸ் தொடங்கி வைத்​தார். மேலும், முன்​னாள் மாணவர் வழி​காட்​டு​தல் திட்​டத்தை தொடங்கி வைத்​து, விழுதுகள் செயலியை​யும் வெளி​யிட்​டார்.

இந்​நிகழ்​வில், மாநில திட்​டக்​குழு செயல் துணைத் தலை​வர் ஜெ.ஜெயரஞ்​சன், இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன், முன்​னாள் இயக்​குநர் மயில்​சாமி அண்​ணாதுரை, மாதிரிப் பள்ளிகள் உறுப்​பினர் செயலர் ஆர்​.சுதன் உட்பட பலர் பங்​கேற்​றனர்.

விழா​வில், அமைச்​சர் அன்​பில் மகேஸ் பேசுகை​யில், “முன்​னாள் மாணவர்​களை இந்த திட்​டம் மூலம் ஒருங்​கிணைத்து இருக்​கிறோம். மயில்​சாமி அண்​ணாதுரை, நாராயணன் போன்ற ஆளு​மை​கள் தமிழகம் முழு​வதும் அதி​கம் உரு​வாக வேண்​டும்.

உயர்ந்த நிலை​யில் இருக்​கும் ஆளு​மை​கள் பள்ளி தூது​வர்​களாக அரசுப் பள்ளிகளில் அடி​யெடுத்து வைத்​தால், நிச்​ச​யம் நிறைய பேர் உரு​வா​வார்​கள். முன்​னாள் மாணவர்​கள் இந்த துறைக்கு நல்ல கருத்​துகளை வழங்​குங்​கள். நாங்​கள் அதை செயல்​படுத்​துகிறோம்​”என்​றார்.

கலைத் திரு​விழா: பள்ளிக் கல்​வித் துறை சார்​பில் நடத்​தப்​பட்ட மாநில அளவி​லான கலைத் திரு​விழா மற்​றும் மன்​றப் போட்​டிகளில் வென்ற மாணவர்​களுக்கு பரிசுகள் வழங்​கும் விழா சென்னை அண்ணா நூற்​றாண்டு நூல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

விழா​வில், அமைச்​சர்​கள் மா.சுப்​ரமணி​யன், பி.கே.சேகர்​பாபு, அன்​பில் மகேஸ் ஆகியோர் தலைமை தாங்​கினர். வெற்றி பெற்ற மாணவர்​களுக்கு பரிசுகளை​யும் அவர்​கள் வழங்​கினர். முன்​ன​தாக, மாணவ, மாணவி​களின் கலைநிகழ்ச்சி நடை​பெற்​றது.

நிகழ்​வில், அமைச்​சர் அன்​பில் மகேஸ் பேசும்​போது, “மாணவர்​கள் தனித்​திறமை​களை வெளிப்​படுத்த தயங்​கக் கூடாது. உங்​கள் திறன்​களை அறிந்து மேம்​படுத்​தவே பள்ளிகளில் கலைத் திரு​விழா போட்​டிகள் நடத்​தப்​படு​கின்​றன” என்​றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *