இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் நூற்​றாண்டு நிறைவு விழா நாளை நடை​பெறுகிறது – முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!!

சென்னை:
இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் நூற்​றாண்டு நிறைவு விழா நாளை நடை​பெறுகிறது. இதில் முதல்​வர் ஸ்டாலின் பங்​கேற்று தலைமை உரை​யாற்றுகிறார்.

இதுதொடர்​பாக, கட்​சி​யின் மாநில செயற்​குழு வெளி​யிட்ட அறிக்​கை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி 1925-ம் ஆண்டு டிச.26-ம் தேதி, கான்​பூரில் நடை​பெற்ற மாநாட்​டில் நிறு​வப்​பட்​டது.

சிந்​தனை சிற்பி சிங்​கார​வேலர் தலைமை தாங்கி உரை​யாற்​றி​னார். இந்​தி​யா​வில் வர்க்​கங்​களற்ற, மதச்​சார்​பற்ற, சாதி​களற்ற, சுரண்​டலற்ற சோஷலிச சமூகத்தை படைப்​பது தான் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் நோக்​கம்.

அதற்​கேற்ப, கட்சி தொடங்​கப்​பட்​டது முதல் விடு​தலைக்​காக போராடிய இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி, மொழி, பண்​பாடு மற்​றும் உரிமை​களை பாது​காக்​க​வும், சாதிய கொடுமை​களை ஒழிக்​க​வும் ஏராள​மான போராட்​டங்​களை நடத்​தி​யுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *