மகேந்திர சிங் தோனி போல சில சிக்ஸர்கள் விளாச வேண்டும்; என்பதே நாங்கள் கற்ற பாடம் என ஜாலியாக பதில் அளித்த நேபாள் வீரர் நந்தன் யாதவ்!!

மும்பை:
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் 2 முறை சாம்பியனான இங்கிலாந்து கத்துக்குட்டி அணியான நேபாளத்திடம் கடும் போராட்டத்துக்கு பிறகே வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்தது.

பின்னர் ஆடிய நேபாளம் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 4 ரன்னில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெறும் 4 ரன்களில் தோற்ற பின், ‘இப்போட்டியில் இருந்து என்ன பாடம் கற்றீர்கள்?’ என்ற கேள்விக்கு நேபாள் வீரர் நந்தன் யாதவ், மகேந்திர சிங் தோனி போல சில சிக்ஸர்கள் விளாச வேண்டும் என்பதே நாங்கள் கற்ற பாடம் என ஜாலியாக பதில் அளித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *