டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் – 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி!!

சென்னை:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.

லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து சூப்பர் 8 சுற்றில் மொத்தம் எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதின.

அகமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் மில்லர் – ப்ரேவிஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ப்ரேவிஸ் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுறையில் சிறப்பாக விளையாடிய மில்லர் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்டப்ஸ் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.


இஷான் கிஷன் டக் அவுட்டாக திலக் வர்மா 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து 3 போட்டிகளில் டக் அவுட்டான அபிஷேக் சர்மா இந்த போட்டியில் 15 ரன்கள் அடித்து அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் 11 ரன்னில் வெளியேறினார்.

18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியாவால் 111 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றியை சுவைத்தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *