சென்னை:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 தொடங்கி செப்டம்பர் 28 வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ல் நடைபெறுகிறது.
குரூப் B-ல் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி, “பஹல்காம் போன்ற பயங்கரவாதம் நடக்கக் கூடாது.
அவை நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா வலுவான நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால் விளையாட்டு விளையாடப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.