காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, மார்ச் 5-ம் தேதி தமிழகம் வருகை

சென்னை: ​
காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, மார்ச் 5-ம் தேதி தமிழகம் வரவுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

தமிழகத்​தில் விரை​வில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறவுள்​ளது. இதையடுத்து அனைத்து அரசி​யல் கட்​சிகளும் தீவிர​மாக களத்​தில் இறங்​கி​யுள்​ளன.

என்​டிஏ கூட்​ட​ணிக்கு ஆதரவு திரட்​டு​வதற்​காக மார்ச் 1-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்​ளார்.

மேலும் அவர் திருப்​பரங்​குன்​றம் சென்று சுவாமி தரிசனம் செய்​வார் எனக் கூறப்​படு​வ​தால் தமிழக அரசி​யலில் பரபரப்பு ஏற்​பட்​டிருக்​கிறது.

இந்​தச் சூழலில் திமுக கூட்​ட​ணி​யில் பேச்​சு​வார்த்​தைக்கு காங்​கிரஸ் இன்​னும் அழைக்​கப்​பட​வில்​லை. இதனால் காங்​கிரஸ் தலை​வர்​கள் சிலர் அதிருப்​தி​யில் உள்​ளனர்.

முதல்​வர் ஸ்டா​லினுடன் கே.சி வேணுகோ​பால் பேச்​சு​வார்த்தை நடத்​திய பிறகும் இழுபறி நீடிக்​கிறது. இப்​படி​யான நிலை​யில், மார்ச் 5-ம் தேதி ராகுல் சென்னை வரு​வ​தாக தகவல் வெளி​யாகி​யிருக்​கிறது.

அன்​றைய தினம் காங்​கிரஸ் சார்​பில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்ள பொதுக்​கூட்​டத்​தில் ராகுல் பேசு​வார் எனக் கூறப்​படு​கிறது. அந்த பொதுக்​கூட்​டத்​தில் ஒரு லட்​சம் தொண்​டர்​கள் கலந்து கொள்​வதற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

திமுக-வுட​னான பேச்​சு​வார்த்தை நிறைவடைந்த பிறகு சோனியா காந்​தி, கார்​கே, ராகுல், பிரி​யங்கா என அனைத்து தலை​வர்​களும் தமிழகம் வந்து பிரச்​சா​ரம் செய்ய உள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *