உண்மையிலேயே நாங்கள் ரூ.10 ஆயிரம் அறிவித்தது தான் சூப்பர் ஹிட் – பழனிசாமி பெருமிதம்!!

சென்னை:
‘தேர்தல் வாக்குறுதியாக ரூ.10 ஆயிரம் அறிவித்ததுதான் சூப்பர் ஹிட்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரி வித்தார். ‘

மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் பழனிசாமி சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

இதில் நேற்று, சென்னை வானகரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசிய தாவது: நான், ஒவ்வொரு குடும்பத்துக்கும் உதவித்தொகை ரூ.10 ஆயிரம் கொடுக்கப்படும் என்று அறிவித்தேன்.

இன்று அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் ஒன்றாக சேர்ந்தால் பூஜ்ஜியம்தான் கிடைக்கும் என்று பேசியிருக்கிறார். திமுகவுக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும்தான் மக்கள் பூஜ்ஜியம் கொடுப்பார்கள்.

ரூ.5 ஆயிரம் கொடுத்தது சூப்பர் ஹிட் என்கிறார் ஸ்டாலின். ஆனால், என்ன கொடுத்திருக்கிறார்? 3 மாத உரிமைத் தொகையுடன் கோடை காலத்துக்கு ரூ.2 ஆயிரம் சேர்த்து ரூ.5 ஆயிரம் கொடுத்தார். ஏனென்றால், அவருக்கு தேர்தல் பயம் வந்து விட்டது.

அதை வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டார். ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் தொகையை முன்பணமாகக் கொடுத்துள்ளார், அவ்வளவுதான். உண்மையிலேயே நாங்கள் ரூ.10 ஆயிரம் அறிவித்ததுதான் சூப்பர் ஹிட்.

வருவாயைப் பெருக்கி நாட்டு மக்களுக்கு திட்டங்களை செய்வேன் என்று சொன்னேன். அதனை வலைதளங்களில் திரித்துப் போட்டுள்ளனர். வருவாயைப் பெருக்குவது என்றால் வசூலை முழுமையாகச் செய்ய வேண்டும்.

லீக்கேஜ் இருக்கிறது. திமுக ஆட்சியில் அரசுக்கு வர வேண்டிய வருவாய் குறைந்துள்ளது. நாம் முறையாக வசூல் செய்தால் திட்டங்களுக்குத் தேவையான வருவாய் கிடைக்கும், சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்குத் தருவோம். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பா.பென்ஜமின், அப்துல் ரஹீம், மாதவரம் மூர்த்தி, அமைப்பு செயலாளர்கள் ராயபுரம் மனோ, திருவேற்காடு சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *