கரூரில் 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் அதை கண்டுகொள்ளாமல் சென்னை சென்ற விஜய் திரும்பி வரவே இல்லை – எஸ்.பி.வேலுமணி தாக்கு!!

கோவை;
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார்.

திமுகவின் மீது கடுமையாகந விமர்சனங்களை முன்வைத்து வரும் விஜய் அண்மையில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்து வருகிறார்.

இதையடுத்து விஜயை அதிமுக அத்தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.அவ்வகையில் கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விஜயை கடுமையாக தாக்கி பேசினார்.


கோவை கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, “விஜய் கரூர் செல்கிறார். 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் அதை கண்டுகொள்ளாமல் சென்னை சென்ற விஜய் திரும்பி வரவே இல்லை..” அவர் உடனே மருத்துவமனைக்கு போயிருக்க வேண்டாமா… காப்பாத்தியிருக்க வேண்டாமா… இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

விஜய்யின் பட ரிலீஸ் பிரச்னையின்போது அவர் என் வீட்டில் இருந்தார், நான்தான் அவரை காரில் அழைத்துச் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைத்து, படத்தை ரிலீஸ் செய்ய உதவினேன்” என்று தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *