மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்!!

மேஷம்
கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள். தனவரவு திருப்தி தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.

ரிஷபம்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். கொள்கைப் பிடிப்போடு செயல் படுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

மிதுனம்
பற்றாக்குறை அகலும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். அன்னிய தேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம்.

கடகம்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். நல்ல நண்பர்களின் நட்பை இழக்க நேரிடும். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது.

சிம்மம்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கைகொடுத்து உதவ நண்பர்கள் காத்திருப்பர். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.

கன்னி
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும்.

துலாம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பு உண்டு. இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள்.

விருச்சிகம்

வாழ்த்து செய்திகளால் வளம் காணும் நாள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வருமானம் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக இருக்கும். தொழி லில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
தனுசு

யோகமான நாள். உடனிருப்பவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபார விருத்தி உண்டு.

மகரம்

திட்டமிட்ட காரியம் திட்ட மிட்டபடி நடைபெறும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத் தோடும் பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

கும்பம்
தன்னம்பிக்கையுடன் செயல் டுவீர்கள். தக்க தருணத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு.

மீனம்

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். விடிகாலையிலேயே வியக்கும் தகவல் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *