குஜ​ராத்​தைக் காட்​டிலும் தமிழகத்​துக்கு அதிக ஸ்மார்ட் சிட்டி திட்​டங்​களை கொடுத்​தவர் பிரதமர் மோடி – குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தா கிருஷ்ணன்!!

சேலம்:
குஜ​ராத்​தைக் காட்​டிலும் தமிழகத்​துக்கு அதிக ஸ்மார்ட் சிட்டி திட்​டங்​களை கொடுத்​தவர் பிரதமர் மோடி என்று குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் கூறி​னார்.

மத்​திய ஜவுளி அமைச்​சகத்​தின் கீழ் சேலத்​தில் செயல்​பட்டு வரும் இந்​திய கைத்​தறி தொழில்​நுட்​பக் கல்​லூரி​யில் ரூ.30 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள கல்வி வளாகத் திறப்பு விழா நேற்று நடை​பெற்​றது.

மத்​திய ஜவுளித் துறை அமைச்​சர் கிரி​ராஜ் சிங் முன்​னிலை வகித்​தார். குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் புதிய கல்வி வளாகத்தை திறந்​து​வைத்​துப் பேசி​ய​தாவது:

சேலம் கைத்​தறி தொழில்​நுட்​பக் கல்​லூரி, பழமைக்​கும் புது​மைக்​கும் பால​மாக விளங்​கு​கிறது. தற்​போதைய காலத்​துக்​கேற்ப, நவீனத் தொழில்​நுட்ப வளர்ச்​சியை மாணவர்​கள் கற்​றுக் கொள்​வது அவசி​யம்.

இந்​தி​யப் பொருட்​கள் மீதான இறக்​கும​திக்கு அமெரிக்கா 50 சதவீத கூடு​தல் வரி விதித்​ததும், தமிழகத்​தைச் சேர்ந்த ஜவுளி உற்​பத்​தி​யாளர்​கள் என்னை சந்​தித்​து, ஜவுளித் துறை​யின் எதிர்​காலம் இருண்டு விட்​ட​தாக தெரி​வித்​தனர்.

இந்​தப் பிரச்​சினையை பிரதமர் கவனித்​துக் கொள்​வார் என்று நான் அவர்​களுக்கு கூறினேன்.

ஜவுளி ஏற்​றுமதி நகரங்​கள்

ஐரோப்​பிய கூட்​டமைப்​புடன் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தத்தை பிரதமர் ஏற்​படுத்​தி​யதன் மூலம் இந்​திய ஜவுளி உற்​பத்​தி​யாளர்​களுக்கு ஏற்​றுமதி வாய்ப்பு அதி​கரித்​துள்​ளது. மேலும், பிரதமரின் முயற்​சி​யால், வரி குறைந்​துள்​ளது.

அமெரிக்கா​வுடன் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் விரை​வில் வரவுள்​ளது. இதனால் சேலத்​தைப்​போல தமிழகத்​தில் மேலும் பல ஜவுளி ஏற்​றுமதி நகரங்​கள் உரு​வாகும்.

பிரதமர் மோடி, குஜ​ராத்​தைக் காட்​டிலும் தமிழகத்​துக்கு அதிக ஸ்மார்ட் சிட்டி திட்​டங்​களைக் கொடுத்​துள்​ளார்.

ஒரே ஆண்​டில் 11 மருத்​து​வக் கல்​லூரி​களை கொடுத்​தார். இக்​கல்​லூரி அரு​கே​யுள்ள ரயில்வே கேட் பகு​தி​யில் சுரங்​கப் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பேசி​னார்.

தமிழக சுற்​றுலாத் துறை அமைச்​சர் ராஜேந்​திரன், எம்​.பி.க்​கள் செல்​வகணப​தி, சிவலிங்​கம், மத்​திய கைத்​தறி மேம்​பாட்டு ஆணை​யர் பீனா, எம்​எல்ஏ பாலசுப்​பிரமணி​யன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

தொடர்ந்​து, நாடு முழு​வதும் உள்ள இந்​திய கைத்​தறி தொழில்​நுட்​பக் கல்​லூரி​களில் சிறப்​பிடம் பெற்ற மாணவர்​களுக்​கு, குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ் ணன் சான்​றிதழ், பதக்​கங்​களை வழங்கி கவுரவித்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *