மதுரை, புதுச்சேரிக்கு பிரதமர் மோடி நாளை வருகை!!

மதுரை / புதுச்​சேரி:
மதுரை, புதுச்​சேரி​யில் நாளை (மார்ச் 1) நடை​பெறும் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​கும் பிரதமர், திருப்​பரங்​குன்​றம் கோயிலுக்​கும் செல்​கிறார்.

இதையொட்​டி, இன்று மாலை டெல்​லி​யில் இருந்து சென்னை வரும் பிரதமர் மோடி இரவு சென்​னை​யில் தங்குகிறார்.

காலை​யில் புதுச்​சேரி​யில் நடை​பெறும் அரசு நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற பின்​னர் ஹெலி​காப்​டரில் பிற்​பகல் 2.45 மணி​யள​வில் தஞ்​சாவூர் செல்​கிறார். அங்​கிருந்து விமானத்​தில் புறப்​பட்டு 3.30 மணி​யள​வில் மதுரை வரு​கிறார்.

மதுரை விமான நிலைய வளாகத்​தில் வான் கட்​டுப்​பாட்டு கோபுரத்தை திறந்து வைக்​கும் பிரதமர், புதுப்​பிக்​கப்​பட்ட ரயில் நிலை​யங்​கள், பரமக்​குடி – ராம​நாத​புரம் நான்கு வழிச் சாலை திட்​டங்​களை காணொலி வாயி​லாகத் திறந்து வைக்​கிறார்.

மாலை 4 மணி​யள​வில் திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​கிறார்.

மாலை 4.30 மணி​யள​வில் மண்​டேலா நகரில் நடை​பெறும் தேசிய ஜனநாயக கூட்​டணி தேர்​தல் பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டத்​தில் பேசுகிறார்.

இதில், அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பாமக தலை​வர் அன்​புமணி, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர்.

பொதுக்​கூட்​டம் முடிந்து மதுரை விமானம் நிலை​யம் சென்​று, அங்​கிருந்து மாலை 6.10 மணி​யள​வில் விமானத்​தில் டெல்லி புறப்​பட்​டுச் செல்​கிறார்.

மண்​டேலா நகரில் நடை​பெறும் தேர்​தல் பிரச்​சா​ர கூட்டத்​துக்​காக பிரம்மாண்ட மேடை மற்​றும் பந்​தல் அமைக்​கப்​பட்டு வரு​கிறது.

பிரதமர் வரு​கை ​யையொட்டி 20 எஸ்​.பி.க்​கள், 13 ஏடிஎஸ்​பிக்​கள், 35 டிஎஸ்​பிக்​கள் மேற்​பார்​வை​யில் 7 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்பட உள்ளனர்.

புதுச்​சேரி​யில் நலத் திட்​டங்​கள்

முன்​ன​தாக, சென்​னை​யில் இருந்து தனி விமானம் மூலம் புது​வைக்கு நாளை காலை 11:40 மணிக்கு பிரதமர் மோடி வரு​கிறார்.

அவரை துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதன், முதல்​வர் ரங்​க​சாமி உள்​ளிட்​டோர் வரவேற்​கின்​றனர்.

பின்​னர், கார் மூலம் விழா நடை​பெறும் லாஸ்​பேட்​டைக்கு வந்​து, அரசு நலத் திட்​டங்​களை தொடங்கி வைத்​துப் பேசுகிறார்.

பிரதமர் வரு​கை முன்னிட்டு, மேடை மற்​றும் பந்​தல் அமைக்​கும் பணி​கள் நடந்து வரு​கின்றன.

மாவட்ட ஆட்​சி​யர் குலோத்​துங்​கன், பிரதமரின் சிறப்பு பாது​காப்பு படை​யினர் மற்​றும் அதிகாரி​களு​டன் நேற்று ஆலோசனை நடத்​தி​னார்.

புதுச்​சேரி சேத​ராப்​பட்​டில் 50 ஏக்​கரில் ரூ.1,100 கோடி​யில் ஜிப்​மர் மருத்​து​வ​மனை​யின் மேம்​பட்ட விபத்து சிகிச்சை மற்​றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் கட்டும் அறிவிப்பை பிரதமர் மோடி வெளி​யிடு​கிறார்.

பிரதமர் அலு​வல​கம் வெளி​யிட்ட அறி​விப்​பில், “புதுச்​சேரி​யில் ரூ.2,700 கோடி மதிப்​பிலான வளர்ச்​சித் திட்​டங்​களை தொடங்​கிவைக்​கும் பிரதமர், பல்​வேறு திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டு​கிறார்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *