தமிழகத்​தில் மேற்கொள்​ளப்​படும் ரயில்வே திட்​டங்​களுக்​கானநிதி ஒதுக்​கீடு 9 மடங்கு அதி​கரித்​துள்​ளது – மதுரையில் பிரதமர் மோடி தகவல்!!

மதுரை:
தமிழகத்​தில் மேற்கொள்​ளப்​படும் ரயில்வே திட்​டங்​களுக்​கானநிதி ஒதுக்​கீடு 9 மடங்கு அதி​கரித்​துள்​ளது என பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​தார்.

விழுப்​புரம் மாவட்​டம் மரக்​காணம் – புதுச்​சேரி நான்கு வழிச்​சாலை, பரமக்​குடி – ராம​நாத​புரம் நான்கு வழிச்​சாலை திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்டு விழா, பொம்​மிடி, காரைக்​குடி, மணப்​பாறை, மொரப்​பூர், பொள்​ளாச்​சி, சோழ​வந்​தான், ஸ்ரீ​வில்​லித்​புத்​தூர், திரு​வாரூரில் மறுசீரமைக்​கப்​பட்ட ரயில் நிலை​யங்​கள் திறப்பு விழா, சென்னை கடற்​கரை- எழும்​பூர் 4-வது ரயில் வழித்​திட்​டத்தை நாட்​டுக்கு அர்​பணிக்​கும் விழா ஆகியவை மதுரையில் நேற்று நடை​பெற்​றது.

இத்​திட்​டங்​களைத் தொடங்​கி​வைத்து பிரதமர் பேசி​ய​தாவது: புனித​மான மதுரை மாநகருக்கு வரு​வதை பெரும் கவுர​வ​மாக கருதுகிறேன்.

மதுரையை ஆட்சி செய்​யும் மீனாட்சி அம்​மனுக்​கும், சுந்​தரேசுவரருக்​கும் தலை வணங்​கு​கிறேன். இந்த விழா தமிழ்​நாட்​டின் வளர்ச்​சிப் பயணத்​தில் முக்​கிய​மானது.

ரூ.4,500 கோடி மதிப்​பிலான திட்​டங்​களைத் தொடங்கி வைத்​துள்​ளேன். கடந்த 12 ஆண்​டு​களாக தமிழக நெடுஞ்​சாலை வளர்ச்​சிக்கு மத்​திய அரசு அதிக நிதி ஒதுக்கி வரு​கிறது.

தமிழகத்​தில் 2014-ம் ஆண்​டிலிருந்து தற்​போது வரை 4,000 கி.மீ. தூரத்​துக்கு புதிய சாலைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இன்று 2 பெரிய தேசிய நெடுஞ்​சாலைத் திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டப்​பட்​டுள்​ளது.

மரக்​காணம் – புதுச்​சேரி நான்கு வழிச்சாலை திட்​டத்​துக்கு ரூ.2,100 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இத்​திட்​டத்​தால் தமிழ்​நாடு – புதுச்​சேரி கடற்​கரைப் பகு​தி​யில் சுற்​றுலா, வர்த்​தகம், பொருளா​தா​ரம் மேம்​படும். பரமக்​குடி – ராம​நாத​புரம் நான்கு வழிச்சாலை திட்​டத்​துக்கு ரூ.1,800 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தச் சாலை​யால் ராமேசுவரத்​துக்கு புனிதப் பயணம் மேற்​கொள்​வோர், விவ​சா​யிகள், கடல்​சார் பொருட்​களின் போக்​கு​வரத்து மேம்​படும்.

தமிழக ரயில்வே திட்​டங்​களுக்​கான நிதி ஒதுக்​கீடு மத்​தி​யில் பாஜக ஆட்​சிக்கு வந்த பின்பு 9 மடங்கு அதி​கரித்​துள்​ளது. 2009 முதல் 2014 வரை நிதி ஒதுக்​கீடு ரூ.880 கோடி​யாக இருந்​தது.

2026- 2027-ம் நிதி​யாண்​டில் ரூ.7,600 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. தமிழகத்​தில் 1,300 கி.மீ. புதிய ரயில் பாதைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. 97 சதவீத மின்​மய​மாக்​கல் பணி​கள் முடிவடைந்​துள்​ளன.

கடந்த ஆண்டு பாம்​பன் புதிய ரயில் பாலம் திறக்​கப்​பட்​டது. தமிழகத்​தில் தற்​போது 9 வந்தே பாரத், 9 அம்​ரித் பாரத் ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்த ரயில்​களின் பெட்​டிகள் சென்னை​யில் தயாரிக்​கப்​படு​கின்​றன.

இதனால் ஏராள​மான இளைஞர்​கள் வேலை​வாய்ப்​பைப் பெறுகின்றனர். அம்​ரித் திட்​டத்​தில் 77 ரயில் நிலை​யங்​கள் நவீனப்​படுத்​தப்​படு​கின்​றன.

கும்​பகோணம், ஏற்​காடு, வேலூர் ஆகாச​வாணி புதிய பண்​பலை நிலை​யங்​கள் மக்​கள் சேவைக்கு அர்ப்​பணிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழக உள் கட்​டமைப்​புக்​கான நிதி ஒதுக்​கீடு 3 மடங்கு அதி​கரித்​துள்​ளது. 2026 மத்​திய பட்​ஜெட்​டில் தமிழகத்​துக்கு அதிக முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்​டது.

அந்த பட்​ஜெட்​டில் சென்னை – பெங்​களூரு, சென்னை – ஹைத​ரா​பாத் புல்​லட் ரயில் திட்​டம் அறிவிக்​கப்​பட்​டது. தமிழ்​நாடு வளமான வரலாறு மற்​றும் மரபுக்​குச் சொந்​த​மான மாநிலம்.

உலக அளவில் வரலாற்​றுச் சிறப்​புமிக்க இடமாக ஆதிச்​ச நல்​லூர் மாற்​றப்​படும். புலி​காட் ஏரி, பொதிகை மலைப்​பகு​தி​யில் சுற்​றுச்​சூழல் முன்​னெடுப்​பு​கள் மேற்​கொள்​ளப்​படும்.

நாடு முழு​வதும் 200 தொழில்​துறை தொகுப்​பு​கள் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. உற்​பத்​திப் பணி​கள் ஊக்​குவிக்​கப்​படும். இதில் தமிழகத்​தி​லும் பல்​வேறு தொழிற்​சாலைகள் உள்​ளன.

இதனால் தமிழக இளைஞர்​கள் பலனடைவார்கள். 2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ச்​சி​யடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க வேண்​டும் என்ற உணர்​வில் ஒவ்​வொரு இந்​தி​யரும் உள்​ளனர்.

நாட்​டின் எதிர்​காலத்தை வடிவ​மைப்​ப​தில் தமிழ்​நாடு முக்​கியப் பங்​காற்​றும். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

முன்​ன​தாக மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் பேசும்​போது, ‘பிரதமர் மோடி தமிழக மக்​கள், தமிழ் மொழி, கலாச்​சா​ரத்​தின் மீது அதிக பற்று வைத்​துள்​ளார்.

இதனால்​தான் உலகம் முழு​வதும் திருக்​குறள் கலாச்​சார மையம் திறந்து வரு​கிறார். திருக்​குறளை 35-க்​கும் மேற்​பட்ட மொழிகளில் மொழி பெயர்க்க நடவடிக்கை எடுத்​துள்​ளார்.

இது​வரை தமிழகத்​துக்கு ரூ.12 லட்​சம் கோடி நிதியை வழங்​கி​யுள்​ளார்’ என்​றார். இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, அமைச்​சர் எ.வ.வேலு, அதி​முக பொதுச்​செய​லா​ளர்​ பழனி​சாமி, பாஜக மாநில தலை​வர்​ நயி​னார்​ நாகேந்​திரன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *