புதுடெல்லி:
ஈரானில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட ஒரு இளம்பெண் (மோர்டிசியா ஆடம்ஸ்) சித்ரவதைக்கு ஆளாகி, கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
கனடாவில் வசிக்கும் அந்த இளம்பெண், கடந்த ஜனவரியில் ஈரான் தலைவர் காமேனிக்கு எதிராக கனடாவில் நடந்த பேரணியில் பங்கேற்ற வீடியோவை நேற்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன், ‘‘உன் (காமேனி) கல்லறையின் மேல் நாங்கள் நடனமாடுவோம் என்று நான் சொன்னேன் அல்லவா?’’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
மற்றொரு பதிவில், “மூஷ் அலியின் (காமேனி) பரிதாபகரமான மரணத்துக்கு வாழ்த்துகள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கனடாவில் நடந்த போராட்டத்தின்போது, காமேனியின் உருவப்படத்தை எரித்து, அதிலிருந்து தனது சிகரெட்டைப் பற்றவைத்த வீடியோ வைரலானதன் மூலம் ஆடம்ஸ் உலகளவில் அறியப்பட்டார்.