இஸ்தான்புல்:
அமெரிக்க- ஈரான் போர் நேற்று 39-வது நாளை எட்டியது. இந்நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்ரேலிய தூதரக கட்டிடத்திற்கு அருகில் நேற்று 3 பேர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு எதிராக போலீஸார் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் இருவர் உயிரிழந்தனர்.
ஒருவர் காயத்துடன் பிடிபட்டார். மேலும் இரு தரப்பு மோதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து தூதரக கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு போலீஸார் ‘சீல்’ வைத்து, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக துருக்கியின் நீதித்துறை அமைச்சர் அகின் குர்லெக் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளம் அல்லது அவர்களின் நோக்கம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கு ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்ணயித்த காலக்கெடு நேற்று முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் காலக்கெடுவின் இறுதி நாளில் இந்த தாக்குதல் நடந்தது இஸ்தான்புல் நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியது.