ராஞ்சி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் சீனியர் நட்சத்திரமுமான எம்.எஸ்.தோனியின் வீடு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிமாலியா பகுதியில் அமைந்துள்ளது.
சமீபத்தில் தோனி தனது வீட்டின் அருகே அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்தில் காரை ஓட்டிச் சென்றது காவல்துறையின் தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 183-ன் கீழ், தோனிக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக ராஞ்சி போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தோனி தற்போது ஐபிஎல் தொடருக்காக சென்னையில் சிஎஸ்கே அணி வீரர்களுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.