உலகக் கோப்பை வெற்​றியை மொத்த நாடும் கொண்​டாடு​வ​தால் மிக​வும் மகிழ்ச்​சி​யாக இருக்​கிறது – சென்னையில் ஹர்மன்பிரீத் உற்சாகம்!!

சென்னை:
ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​திருந்​தது.

இந்​நிலை​யி​யில் ஹர்​மன்பிரீத் கவுருக்கு சென்னை செம்​மஞ்​சேரி​யில் உள்ள சத்​ய​பாமா பல்​கலைக்​கழகத்​தில் நேற்று பாராட்டு விழா நடத்​தப்​பட்​டது.

இந்நிகழ்ச்​சிக்கு பின்​னர் நிரூபர்​களிடம் ஹர்​மன்​பிரீத் கவுர் கூறியதாவது: உலகக் கோப்பை வெற்​றியை மொத்த நாடும் கொண்​டாடு​வ​தால் மிக​வும் மகிழ்ச்​சி​யாக இருக்​கிறது.

நமது நாட்​டில் ஆடவர், மகளிர் கிரிக்​கெட் சமமாக நடத்​தப்​படு​வ​தாகவே உணர்​கிறேன். ஐசிசி கோப்​பையை வெல்ல வேண்​டும் என்ற லட்​சத்​தி​யத்தை நாங்​கள் அடைந்​து​விட்​டோம். இந்த வெற்றி மகளிர் கிரிக்​கெட்​டுக்கு ஊக்​க​மாக இருக்​கும். ஏராள​மான இளம் வீராங்​க​னை​கள் உந்​துதல் பெறு​வார்​கள்.

விமர்​சனம் என்​பது விளை​யாட்​டில் மட்​டும் அல்ல, அது ஒவ்​வொரு​வர் வாழ்க்​கை​யின் ஒரு பகு​தி​யாகவே இருக்​கிறது.

எனக்கு எப்​போதும் அது ஒரு சாதாரண பிரச்​சினை​தான். சமூக வலை​தளங்​களில் மக்​கள் நம்மை பாராட்​டு​வார்​கள்.

அது முக்​கி​யம்​தான். ஆனால் அதை ஏன் கவனத்​தில் எடுத்துக்​கொள்ள வேண்​டும்? இவ்​வாறு அவர் கூறி​னார்.

‘ரஜினி போனில் வாழ்த்​தி​னார்’: நிகழ்ச்​சி​யின் போது ஹர்​மன்​பிரீத் கவுர் கூறும்​போது, “உல​கக் கோப்பை தொடர் முடிவடைந்​ததும் சுற்​றுலா​வுக்​காக தாய்​லாந்து சென்​றிருந்​தேன். அப்​போது நடிகர் ரஜினி​காந்த் போனில் தொடர்பு கொண்டு சாம்​பியன் பட்​டம் வென்​றதற்​காக வாழ்த்து தெரி​வித்​தார்.

அந்த தருணத்தை பெரு​மை​யாக உணர்ந்​தேன். சென்​னை​யில் அவரை நேரில் சந் திக்​கலாம் என நினைத்​திருந்​தேன். ஆனால் அவர், சினிமா படப்​பிடிப்​புக்​காக வெளி​நாடு சென்​றுள்​ளார்​” என்​றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *