தேர்​தலில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​கள் நிலு​வை​யில் உள்ள வழக்​கு​கள் விவரங்​களை விளம்​பரம் செய்ய வேண்​டும் என தலைமை தேர்தல் அதி​காரி அறிவுறுத்தல்!!

சென்னை:
தேர்​தலில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​கள் நிலு​வை​யில் உள்ள வழக்​கு​கள் விவரங்​களை விளம்​பரம் செய்ய வேண்​டும் என தலைமை தேர்தல் அதி​காரி அறி​வுறுத்தி உள்​ளார்.

இதுகுறித்து தமிழக தலை​மைத் தேர்தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் வெளி​யிட்​டுள்ள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

உச்ச நீதி​மன்​றத் தீர்ப்​பின் அடிப்​படை​யில், தேர்​தலில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​கள் தங்​கள் மீது நிலு​வை​யில் உள்ள வழக்​கு​கள் அல்​லது தண்​டனை விவரங்​களை உரிய படிவங்​களில் செய்​தித்​தாள்​கள் மற்​றும் தொலைக்​காட்​சிகளில் விளம்​பரம் செய்ய வேண்​டும்.

அதே​போல், அத்​தகைய வேட்​பாளர்​களை நிறுத்​தும் அரசி​யல் கட்​சிகளும் அந்த விவரங்​களை ஊடகங்​கள் மற்​றும் கட்​சி​யின் அதி​காரப்​பூர்வ வலை​தளங்​களில் வெளி​யிட வேண்​டும்.

தேர்தல் ஆணை​யம் இதற்​கென பிரத்​யேக படிவங்​களை வரையறுத்​துள்​ளது. வேட்​புமனு திரும்​பப் பெறு​வதற்​கான கடைசி நாளுக்கு அடுத்த நாள் முதல், வாக்​குப்​ப​திவு முடிவதற்கு 48 மணி நேரத்​துக்கு முன்பு வரை 3 முறை வெவ்​வேறு நாட்​களில் இந்த விளம்​பரங்​களை வெளி​யிட வேண்​டும்.

வேட்​பாளர் தேர்வு செய்​யப்​பட்ட 48 மணி நேரத்​துக்​குள் அல்​லது வேட்​பு மனு தாக்​கல் செய்​யப்​படு​வதற்கு 2 வாரங்​களுக்கு முன்​பாகவே (இதில் எது முந்​தையதோ அதன்​படி) விவரங்​களை வெளி​யிட வேண்​டும்.

இது தொடர்​பான அறிக்​கையை அடுத்த 72 மணி நேரத்​துக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும். இது தொடர்​பான முழு​மை​யான அறி​வுரைகள், அங்​கீகரிக்​கப்​பட்ட செய்​தித்​தாள்​கள் மற்​றும் தொலைக்​காட்சி அலை​வரிசைகளின் பட்​டியலை அறிந்​து​ கொள்ள பொது​மக்​கள் மற்​றும் வேட்​பாளர்​கள் www.elections.tn.gov.in என்ற இணை​யதளத்தை பார்​வை​யிடலாம். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *