துருக்கி குகையி​லிருந்து கிடைக்​கும் அரிய வகை தேன் என்று கூறி ரூ.15 லட்​சத்​துக்கு விற்ற சாமி​யார் கைது!!

நாசிக்:
துருக்கி குகையி​லிருந்து கிடைக்​கும் அரிய வகை தேன் என்று கூறி ரூ.15 லட்​சத்​துக்கு விற்ற சாமி​யார் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீது பாலியல் வன்​கொடுமை புகாரும் கூறப்​பட்​டுள்​ளது.

மகா​ராஷ்டிர மாநிலம் நாசிக்கை சேர்ந்​தவர் ஜோதிடர் அசோக் காரத். கடற்​படை​யில் பணி​யாற்றி ஓய்​வு​பெற்ற அசோக், சாமியார் என்​றும் ஜோதிடர் என்​றும் கூறிக் கொண்டு மக்​களிடம் பணத்தை ஏமாற்றி வந்​துள்​ளார்.

இந்​நிலை​யில், ஒரு பெண் கடந்த வாரம் நாசிக் போலீ​ஸில் அசோக் மீது பாலியல் வன்​கொடுமை புகார் செய்​தார். இதன் அடிப்​படை​யில் போலீ​ஸார் அசோக்கை கைது செய்​தனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “அவர் துருக்​கியி​லிருந்து கிடைக்​கும் அரிய வகை ‘எல்​விஷ்’ வகை தேன் என்று கூறி ஒரு கிலோவை ரூ.15 லட்​சத்​துக்கு விற்​பனை செய்து வந்​துள்​ளார்.

இது ஒரு மாயாஜால தேன் என்​றும், இதைச் சாப்பிட்டால் இளமை​யாக மாறி​விடலாம் என்​றும் கூறி​யுள்​ளார்.

நானும் இதைக் குடித்​துப் பார்த்​தேன். நீங்​களும் இதைக் குடித்து பலன் ​பெறுங்​கள் என்று தன்​னிடம் வந்​தவர்​களிடம் கூறி அவர் ஏமாற்​றி​யுள்​ளார். மேலும், மகா​ராஷ்டிர அரசி​யல்​வா​தி​களும் இவருடைய வாடிக்​கை​யாளர்​களாக இருந்​துள்​ளனர்.

இந்த எல்விஷ் வகை தேன் ஒரு கிலோ ரூ.9 லட்​சத்​துக்கு விற்​பனை​யாகிறது. இது துருக்​கி​யின் ஆர்ட்​வின் நகரிலுள்ள 1,800 மீட்​டர் ஆழத்​தி​லுள்ள குகையி​லிருந்து எடுக்​கப்​படு​கிறது.

அந்​தப் பெயரைக் கூறி இவர் ஏராள​மான தேன் வகைகளை இங்கு விற்று பலரை ஏமாற்​றி​யுள்​ளார். அவரை நீதி​மன்​றத்​தில் ஆஜர்படுத்தி 5 நாள் போலீஸ் காவலில் எடுத்​துள்​ளோம்.

அவரது வீடு அருகே துப்​பாக்​கி, தோட்​டாக்​கள் உள்​ளிட்​ட​வற்றை பறி​முதல் செய்​துள்​ளோம். அவரிடம் தொடர்ந்து வி​சா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *