பாட்னா,
பீகாரில் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து மதுவிலக்கு அமலில் உள்ளது. ஜன் சுராஜ் கட்சியை தொடங்கிய தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வோம் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
பீகாரில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கும்நிலையில், அவரது ஜன் சுராஜ் கட்சியின் தேசிய தலைவர் உதய் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“பீகாரில் மதுவிலக்கால் ரூ.28 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மது அருந்துவதற்கும், விற்பனைக்கும் உள்ள தடையை உடனே நீக்குவோம்.
அதன் மூலம் ரூ.28 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை சேமிக்க முடியும். அதை பயன்படுத்தி, உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் ரூ.5 லட்சம் கோடி முதல் ரூ.6 லட்சம் கோடிவரை கடன் பெறுவோம்.” இவ்வாறு அவர் கூறினார்.