மேஷம்
யோகமான நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். சுபவிரயம் உண்டு. உத்தியோக முயற்சி பலன் தரும்.
ரிஷபம்
திடீர் பயணம் தித்திக்க வைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்
சேமிப்பு உயரும் நாள். பணிபுரியுமிடத்தில் இருந்த பகை மாறும். ஆரோக்கியத்திற்காக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள்.
கடகம்
தடைகள் அகலும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டு.
சிம்மம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் விரயம் உண்டு. வேலைப்பளு கூடும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
கன்னி
யோகமான நாள். சொல்லை செயலாக்கிக் காட்டுவீர்கள். அலைபேசி வழியில் அனுகூலச் செய்தி வந்து சேரும். சகோதரப் பகை மாறும்.
துலாம்
வளர்ச்சி கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு.
விருச்சிகம்
புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோக நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். விரயத்திற்கேற்ற வரவு உண்டு.
தனுசு
நினைத்தது நிறைவேறும் நாள். காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் வளைந்து கொடுத்து செல்வது நல்லது.
மகரம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். நட்பு பகையாகலாம். வீண் விரயம் உண்டு. கொள்கைப்பிடிப்போடு செயல்பட இயலாது.
கும்பம்
விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் மறையும் நாள். உறவினர் பகை மாறும். நேற்று சந்தித்தவர்கள் மூலம் நிகழ்காலத்தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்
வசதிகள் பெருகும் நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் வரலாம். தொழிலில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். பயணங்களால் நன்மை கிட்டும்.