இன்றைய பஞ்சாங்கம்!!

விசுவாவசு ஆண்டு பங்குனி-17 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை

திதி : திரயோதசி காலை 7.46 மணி வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம் : பூரம் பிற்பகல் 3.57 மணி வரை பிறகு உத்திரம்

யோகம் : சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். பரமக்குடி அன்னை ஸ்ரீ முத்தாலம்மன் குதிரை வாகனத்தில் புறப்பாடு. பழனி ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாணம். திருச்சி ஸ்ரீ தாயுமானவர் தெப்பம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பச்சை குதிரை வாகனத்தில் பவனி.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கததவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய கோவிலான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார அர்ச்சனை.

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வெற்றி

ரிஷபம்-கடமை

மிதுனம்-பணிவு

கடகம்-நட்பு

சிம்மம்-அன்பு

கன்னி-ஆதரவு

துலாம்- களிப்பு

விருச்சிகம்-பரிசு

தனுசு- சுகம்

மகரம்-மாற்றம்

கும்பம்-போட்டி

மீனம்-கடமை

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *