மேஷம்
சுபச்செலவுகள் ஏற்படும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வருமானம் திருப்தி அளிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. வழக்குகள் சாதகமாக அமையும்.
ரிஷபம்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும். நண்பர்கள் பகையாகலாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது.
மிதுனம்
வரவு வாயிலைத் தேடி வரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். தொழில் வளர்ச்சிக்காக முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.
கடகம்
மலைபோல வந்த துயர் பனிபோல் விலகும் நாள். உத்தியோகத்தில் கூடுதல் சம்பளம் தருவதாக பிற நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.
சிம்மம்
மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
தனவரவு திருப்தி தரும் நாள். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.
துலாம்
முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். பயணங்களால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
விருச்சிகம்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். தொழில் முன்னேற்றம் உண்டு.
தனுசு
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். வரன்கள் முடிவாகும். தனவரவு திருப்தி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மகரம்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் சிந்தனை மேலோங்கும்.
கும்பம்
சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். திடீர் பயணங்களால் சில திருப்பங்கள் ஏற்படும். தொழிலில் இருந்த இடையூறுகளைச் சமாளிப்பீர்கள்.
மீனம்
புதிய பாதை புலப்படும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.