தமிழகத்​தில் இருந்து மாநிலங்​களவைக்கு போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்ட தம்​பிதுரை, திருச்சி சிவா, அன்​புமணி,எல்​.கே.சுதீஷ் உள்​ளிட்ட 6 பேர் பதவியேற்பு!!

சென்னை:
தமிழகத்​தில் இருந்து மாநிலங்​களவைக்கு போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்ட தம்​பிதுரை, திருச்சி சிவா, அன்​புமணி,எல்​.கே.சுதீஷ் உள்​ளிட்ட 6 பேர் நேற்று பதவி​யேற்​றுக் கொண்​டனர்.

தமிழகத்​தைச் சேர்ந்த மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் திருச்சி சிவா, என்​.ஆர்​.இளங்​கோ, அந்​தி​யூர் செல்​வ​ராஜ், என்​.​வி.என்​.க​னி​மொழி சோமு, மு.தம்​பிதுரை, ஜி.கே.​வாசன் ஆகிய 6 பேரின் பதவிக்​காலம் ஏப்​ரல் 2-ம் தேதி முடிவடைய இருந்​தது.

அந்த 6 இடங்​களுக்கு புதிய உறுப்​பினர்​களை தேர்ந்​தெடுப்​ப​தற்​கான தேர்​தல், கடந்த மார்ச் 16-ம் தேதி நடத்​தப்​பட்​டது.

இந்த தேர்​தலில் திமுகவை சேர்ந்த திருச்சி சிவா, கான்​ஸ்​டன்​டைன் ரவீந்​திரன், காங்​கிரஸ் கட்​சியை சேர்ந்த கிறிஸ்​டோபர் திலக், தேமு​தி​கவை சேர்ந்த எல்​.கே.சுதீஷ், அதி​முக​வின் தம்​பிதுரை, பாமகவை சேர்ந்த அன்​புமணி ராம​தாஸ் ஆகிய 6 பேர் போட்​டி​யிட்​டனர். இவர்​கள் 6 பேரும் போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், புதி​தாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 6 பேரும் மாநிலங்​களவை எம்​.பி.க்​களாக நேற்று பதவி​யேற்​றுக்​கொண்​டனர்.

அவர்​களுக்கு குடியரசு துணைத் தலை​வரும், மாநிலங்​களவை தலை​வரு​மான சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பதவிப் பிர​மாணம் செய்​து​வைத்​தார்.

தேமு​தி​க​வின் எல்​.கே.சுதீஷ் பதவி​யேற்​ற​போது கட்​சி​யின் நிறு​வன​ரான விஜய​காந்த் படத்தை எம்​.பிக்​களை நோக்கி காண்​பித்​தார். கான்​ஸ்​டன்​டைன் ரவீந்​திரன், கிறிஸ்​டோபர் திலக், எல்​.கே.சுதீஷ் ஆகிய மூவரும் முதல்​முறை​யாக மாநிலங்​களவை எம்​.பி.க்​களாக பதவி​யேற்​றுள்​ளனர் என்​பது குறிப்​பிடத்​தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *