காலபைரவரின் ஒரு மந்திரத்தை கூறி 108 முறை அந்த விளக்கிற்கு முன்பாக அர்ச்சனை செய்ய வேண்டும்!!

ஆனி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி என்பது நாளை (செவ்வாய்க் கிழமை) மதியம் 1:24 மணிக்கு தொடங்கி மறுநாள் புதன்கிழமை மதியம் 12:21 மணிக்கு நிறைவடைகிறது.

பைரவர் வழிபாட்டுக்கு இந்த நேரத்தில் ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு மீதம் இருக்கும் நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேய்பிறை அஷ்டமி வழிபாட்டை வீட்டில் செய்வதற்கு பைரவரின் சிலையோ, படமோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காலபைரவரின் சிலை, படம் இருக்கும் பட்சத்தில் அதை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம், புனுகு வைத்துக் கொள்ளுங்கள். சிலை இருக்கும் பட்சத்தில் பன்னீரால் அபிஷேகம் செய்து கொள்ளுங்கள்.

படமோ, சிலையோ இல்லை என்பவர்கள் பைரவரை நினைத்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் நல்லெண்ணெய் தீபமாக இருக்க வேண்டும்.

ஒரு வெள்ளை நிற துணியை எடுத்து அதில் 54 எண்ணிக்கையில் மிளகை போட்டு மூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபம் வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு இந்த தீபத்திற்கு முன்பாக உப்பு சேர்க்காத தயிர் சாதத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

அடுத்ததாக சிவப்பு நிற மலர்களை பயன்படுத்தி காலபைரவரின் ஒரு மந்திரத்தை கூறி 108 முறை அந்த விளக்கிற்கு முன்பாக அர்ச்சனை செய்ய வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் கால பைரவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அவரின் அருளால் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *