என்​டிஏ கூட்​டணி ஆட்​சிக்கு வந்​தால் தமிழகத்​தின் வளர்ச்சி முடக்​கப்​படும்; குழந்​தைகளுக்​கான கல்வி திட்​டங்​கள் அனைத்​தும் நிறுத்​தப்​படும் – கெஜ்ரிவால் கருத்து!!

சென்னை:
‘என்​டிஏ கூட்​டணி ஆட்​சிக்கு வந்​தால் தமிழகத்​தின் வளர்ச்சி முடக்​கப்​படும், குழந்​தைகளுக்​கான கல்வி திட்​டங்​கள் அனைத்​தும் நிறுத்​தப்​படும்’ என ஆம் ஆத்மி தலை​வர் அரவிந்த் கெஜ்ரி​வால் தெரி​வித்​தார்.

சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது: திமுக கூட்​ட​ணிக்கு வாக்கு சேகரிக்கவந்​ததற்கு பல காரணங்​கள் உள்​ளன. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் செயல்​படுத்​திய நலத்​திட்​டங்​கள் முன்​னோடி​யானது.

5 ஆண்​டு​களில் தமிழகத்​தின் வளர்ச்சி அதி​கரித்​துள்​ளது. ஏழை, நடுத்தர மக்​கள் நிம்​ம​தி​யாக உணர்​கின்​றனர். சில திட்​டங்​கள் நாடு முழு​வதும் பின்​பற்​றப்​பட்​டுள்​ளன.

தேசிய அளவில் மத்​திய அரசால் கூட்​டாட்சி தத்​து​வத்​துக்​கும், ஜனநாயகத்​துக்​கும் நெருக்​கடி ஏற்​படும்​போது ஸ்டா​லின் மிக வலிமை​யாக குரல் கொடுத்​துள்​ளார்.

நாட்​டுக்​காக, ஜனநாயகத்​துக்​காக, மாநில சுயாட்​சிக்​காக உறு​தி​யாக நின்​றவர். இந்த காரணங்​களால் அவரை ஆதரிக்​கிறேன்.

பாஜக​வின் பிரி​வினை​வாதம், வெறுப்பு அரசி​யலை தமிழக மக்​கள் எதிர்க்​கின்​றனர்.

அதனால்​தான் பாஜக​வால் பல ஆண்​டு​களாக தமிழகத்​தில் வெல்ல முடிய​வில்​லை.

அதி​முக​வுடன் பாஜக கூட்​ட​ணி​யில் உள்​ளது. ஆனால் பாஜக​வின் பிடி​யில்​தான் அதி​முக உள்​ளது. ஒரு இடத்​தில் பாஜக வென்​றால்​ கூட, பாஜகவை சேர்ந்​தவர்​தான் முதல்​வ​ராக வரு​வார்.

நிதிஷ் குமாரின் நிலை​மை​தான் இங்கு இருப்​பவர்​களுக்​கும் ஏற்​படும்.

டெல்​லி​யில் கடந்த ஆண்டு பாஜக வெற்றி பெற்​றது. ஒரு ஆண்டு காலத்​திலேயே மக்​கள் பாஜக ஆட்​சி​யால் விரக்தி அடைந்​துள்​ளனர். ஆம் ஆத்மி செயல்​படுத்​திய கல்​வி, வளர்ச்சி திட்​டங்​களை ஒன்​றும் இல்​லாமல் செய்து விட்​டனர்.

அதே​போல், தமிழகத்​தில் என்​டிஏ கூட்​டணி ஆட்​சிக்கு வந்​தால் ஸ்டா​லினின் திட்​டங்​களை​யும் ஒன்​றும் இல்​லாமல் செய்து விடு​வார்​கள்.

5 ஆண்​டு​களின் முன்​னேற்​றம், நலத்​திட்​டங்​கள், குழந்​தைகளுக்​கான கல்வி திட்​டங்​கள் அனைத்​தும் நிறுத்​தப்​படும்.

டபுள் இன்​ஜின் அரசு என சொல்​கின்​றனர். அனைத்து இன்​ஜின்​களும் தோல்​வி​யுற்​றுள்​ளன. பாஜக ஆளும் மாநிலங்​கள் எங்கே வளர்ந்து இருக்​கின்​றன. சீரழி​வு​தான் அடைந்​துள்​ளன.

திமுக ஆட்​சி​யில் மக்​கள் ஏற்​கெனவே நன்​றாக இருக்​கும்​போது மாற்​றம் ஏன் வேண்​டும்? தேர்​தலில் போட்​டி​யிட அனை​வருக்​கும் உரிமை உண்​டு, அதனால் விஜய் போட்​டி​யிடு​கிறார்.

அவர் இந்த தேர்​தலில் எந்த தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்த மாட்​டார். மின்​சா​ரம், மருத்​து​வம், போக்​கு​வரத்து ஆகியவை பொது​மக்​களுக்கு வழங்​கு​வ​தில் என்ன தவறு? எளிய மக்​களுக்கு வழங்​கப்​படு​பவை இலவசமல்ல; நலத்​திட்​டம். அதே​நேரம் அம்​பானி, அதானிக்கு பாஜக வழங்​கு​வது​தான் இலவசம்.இவ்​வாறு அவர் கூறி​னார்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *