மேடையேறிய பொறுப்பாளர்கள்.. 2-ம் ஆண்டு தொடக்க விழா!!

சென்னை:

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தமிழ்தாய் வாழ்த்துடன் கோலாகலமாக தொடங்கியது.

விழா மேடையில் த.வெ.க. தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா, த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வீற்றிருந்தனர்.

விழா நிகழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து த.வெ.க. கொள்கை பாடல் ஒளிப்பரப்பப்பட்டது.

அதனை தொடர்ந்து இறுதி இலக்கை அடைவது தொடர்பான உறுதி மொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

இதன்பின், கொள்கைத் தலைவர்களுக்கும், மொழிப்போர் தியாகிகளுக்கும் த.வெ.க. தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தளபதி விஜய் பயிலகத்தில் பயிலும் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்து உரை நிகழ்த்தினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *