மக்களின் தீர்ப்பு எங்கள் வழிகாட்டி; மக்களின் நலன் எங்கள் உயர்ந்த கடமை – செல்வப்பெருந்தகை !!

சென்னை:
“மக்களின் தீர்ப்பு எங்கள் வழிகாட்டி; மக்களின் நலன் எங்கள் உயர்ந்த கடமை.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், மக்கள் நலனையும் மாநில முன்னேற்றத்தையும் முன்னிலைப்படுத்தி செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாடு மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை முழு மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலனையும் மாநில முன்னேற்றத்தையும் முன்னிலைப்படுத்தி அவர்கள் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் தொகுதியில் முழு அர்ப்பணிப்புடன் உழைத்த தோழமைக்கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

தமிழ்நாடு முழுவதும் நமது கூட்டணி வெற்றிக்காக ஒன்றுபட்டு உழைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்த அனைத்து தோழமைக்கட்சிகளுக்கும், மேலும் தமிழ்நாடு முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட காங்கிரஸ் உறவுகளுக்கும் என் நன்றிகள்.

மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பாதையில், சமூக நீதி மற்றும் ஜனநாயகப் பாதுகாப்பை உறுதியாக நிலைநிறுத்த தொடர்ந்து செயல்படுவோம்.

மக்களின் தீர்ப்பு எங்கள் வழிகாட்டி; மக்களின் நலன் எங்கள் உயர்ந்த கடமை.” எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *