புதுச்சேரியில் என்டிஏ வெற்றியானது இரட்டை இன்ஜின் ஆட்சிக்கு கிடைத்த மகத்தான அங்கீகாரம் ; மோடிக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்!!

புதுச்சேரி:
புதுச்சேரியில் என்டிஏ வெற்றியானது இரட்டை இன்ஜின் ஆட்சிக்கு கிடைத்த மகத்தான அங்கீகாரம். உங்களின் வழிகாட்டுதலே மிகப்பெரிய பலம் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.

என்டிஏ கூட்டணியின் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி பிரதமர் மோடிக்கு இன்று அனுப்பியுள்ள கடிதம்:

புதுச்சேரி மக்கள் சார்பாக, உங்களின் அன்பான வார்த்தைகளுக்கும் தொடர்ச்சியான ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றி.

இன்றைய வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் ஆணை, உங்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை மாற்றியமைத்த ‘இரட்டை இன்ஜின்’ ஆட்சிக்கும் கிடைத்த ஒரு மகத்தான அங்கீகாரமாகும். புதுச்சேரி மக்கள் தீர்க்கமாகத் தீர்ப்பளித்துவிட்டனர்.

வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றில் என்.டி.ஏ. கூட்டணியின் சாதனைகள் மீது நம்பிக்கை வைத்த ஒவ்வொருவருக்கும் இந்த வெற்றி சொந்தமானது.

உங்களின் தொடர்ச்சியான வழிகாட்டுதலே எங்களின் மிகப்பெரிய பலமாக இருந்தது. அதுவே, கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் நலன் சார்ந்த நலத்திட்டங்களையும் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு வளர்ச்சியையும் வழங்க எங்களுக்கு மிகவும் உதவியது.

தொடர்ச்சியாக என்டிஏ அரசில் இரண்டாவது முறையாகப் பதவியேற்கும் இவ்வேளையில், நமது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதிலும், வளர்ந்த இந்தியா குறித்த உங்களின் தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிக்கும் ஒரு ‘விக்சித் புதுச்சேரியை’ உருவாக்குவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

உங்களின் மதிப்புமிக்க வழிகாட்டுதலின் கீழ் எங்களின் வளர்ச்சிப் பயணத்தைத் தொடர ஆவலுடன் காத்திருக்கிறோம்.

தங்களின் தலைமைத்துவத்திற்கும், புதுச்சேரி மக்களுக்கு எப்போதும் துணை நிற்பதற்கும் மீண்டும் ஒருமுறை நன்றி என்று தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *