சென்னை,
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில முக்கியமான தீர்மானங்களின் விவரம் வருமாறு:
*வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட அதிமுக பொதுக்குழுவில் அங்கீகாரம்
*தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும்
*கூட்டணி குறித்து முடிவு செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம். கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து முடிவு செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் அளிக்கப்படுகிறது.மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைய உள்ளன.
*நீதித்துறைக்கே சவால் விடுக்கும் திமுகவின் ஆதிக்க மனப்பான்மையை கண்டிக்கிறோம்.
*எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை அதிமுக வரவேற்கிறது.
*அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்! குறையும் முதலீடுகள் இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள்!
தமிழக இளைஞர்களுக்கு எட்டாக்கனியான வேலை வாய்ப்புகள். தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி, பொய் புரட்டு போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்!
*விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதில் வல்லவர்கள் திமுக-வினர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
அவரது குடும்ப உறுப்பினர்கள். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என்று தொடங்கி மதுரை மேயர் ராஜினாமா என்கிற அளவுக்கு. ஊழல் சாம்ராஜ்யமாகத் திகழும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்
*சமூக நீதியை காவு கேட்கும் திமுக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து தமிழ் நாடே வெட்கித் தலைகுனிகிறது!
ஜாதிகள் அற்ற சமத்துவத்தை ஏற்படுத்திட வேண்டும் என்பதே, பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது கொள்கைகளாகும்! இவற்றிற்கு மாற்றாக, பட்டியலினத்தை இழிவு செய்தும், ஒடுக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதும், திமுக ஆட்சியில் நடந்துகொண்டிருப்பதற்கு கடும் கண்டனம்
*மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிய, தென்னக நதிகளின் இணைப்பு மற்றும் கோதாவரி-காவேரி இணைப்பையும்; ஆனைமலையாறு-பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தைத் தொடர்வதற்கு அக்கறை இல்லாமலும், நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்தத் தவறியும், மேகதாது கட்டுவதாகச் சொல்லும் நடவடிக்கைகளை அணை தடுக்கத் தவறியும், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முழுமையாக செயல்படுத்தத் தவறியும், முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தவறியும், உப்பிலிப்பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை தமிழ் நாட்டிலேயே மிக நீளமான பாலத்தை 1,621 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கழக அரசு கொண்டுவந்த திட்டத்தை, ஸ்டிக்கர் ஒட்டி ஃபெயிலியர் மாடல் திமுக அரசு, தான் கொண்டுவந்ததாக திறப்பு விழா நடத்தி இருக்கும் திமுக அரை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது ’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.