ஆட்சி மாற்றம் காரணமாக சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நியமிக்​கப்​பட்ட தங்​களது பதவியை தாமாக முன்​வந்து ராஜி​னாமா செய்த அரசு வழக்​கறிஞர்​கள்!!

சென்னை:
தமிழகத்​தில் ஏற்​பட்​டுள்ள ஆட்சி மாற்​றம் காரண​மாக கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நியமிக்​கப்​பட்ட அரசு வழக்​கறிஞர்​கள் தங்​களது பதவியை தாமாக முன்​வந்து ராஜி​னாமா செய்து வரு​கின்​றனர்.

அரசுக்​கும், நீதித்​துறைக்​கும் இணைப்புப் பால​மாக செயல்​பட​வும், அரசு தரப்​பில் நீதி​மன்​றங்​களில் ஆஜராகி வாதிட​வும் தமிழக அரசின் பிர​தி​நி​தி​களாக செயல்​பட​வும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அரசு சட்ட அதி​காரி​கள் நியமிக்​கப்​படு​வது வழக்​கம்.

எந்​தக் கட்சி ஆட்சியமைக்கிறதோ அக்​கட்​சி​யின் வழக்​கறிஞர்​கள் சட்ட அதி​காரி​களாக நியமிக்​கப்​பட்டு வரு​கின்​றனர்.

தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டதும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அரசு தலைமை வழக்​கறிஞர், கூடு​தல் தலைமை வழக்​கறிஞர்​கள், மாநில அரசு ப்ளீடர், மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர், சிறப்பு அரசு வழக்​கறிஞர்​கள், கூடு​தல் அரசு வழக்​கறிஞர்​கள் மற்​றும் சிவி்ல், கிரிமினல் துறை​களுக்​கான அரசு வழக்​கறிஞர்​கள் என 100-க்​கும் மேற்​பட்ட பதவி​களை பிடிக்க சென்​னை​யிலும், மதுரை​யிலும் வழக்​கறிஞர்​கள் மத்​தி​யில் கடும் போட்டி நில​வும்.

தற்​போது தவெக ஆட்சி அமைத்​துள்ள நிலை​யில் கடந்த திமுக ஆட்​சி​யில் சட்ட அதி​காரி​களாக நியமிக்​கப்​பட்​ட​வர்​கள் தங்​களது பதவியை ஒரு​வர் பின் ஒரு​வ​ராக தாமாக முன்​வந்து ராஜி​னாமா செய்து வரு​கின்​றனர்.

அதன்​படி, அரசு கூடு​தல் தலைமை வழக்​கறிஞர்​களாக நியமிக்​கப்​பட்​டிருந்த ஜெ.ர​வீந்​திரன், பி.​முத்​துக்​கு​மார் மற்​றும் மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞ​ராக நியமிக்​கப்​பட்ட அசன் முகமது ஜின்னா ஆகியோர் தாமாக முன்​வந்து தங்​களது பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளனர்.

இவர்​கள் தமிழக அரசுக்கு தனித்​தனி​யாக அனுப்​பி​யுள்ள கடிதங்​களில் கடந்த 5 ஆண்​டு​களாக தங்​களுக்கு ஒத்​துழைப்பு நல்​கிய தமிழக முன்​னாள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்​கும், தமிழக அரசின் அனைத்து அதி​காரி​களுக்​கும் நன்றி தெரி​வித்​துள்​ளனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *