அதிமுக சட்டமன்ற குழு தலைவர் பதவி: எடப்பாடி பழனிசாமிக்கு 17 பேர் மட்டுமே ஆதரவு

சென்னை:
அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என அக்கட்சியைச் சேர்ந்த 17 சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைச் செயலரிடம் மனு அளித்துள்ளனர். இதனால், அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் பதவியைத் தக்கவைப்பதில் பழனிசாமிக்குச் சிக்கல் எழுந்துள்ளது.

17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று காலை தொடங்கியது.

அதிமுகவில் மொத்தம் 47 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், சட்டமன்ற கட்சித் தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இதுவரை 17 எம்எல்ஏக்கள் மட்டுமே சட்டமன்றச் செயலரிடம் மனு அளித்துள்ளனர்.

அதில், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.

மீதமுள்ள 30 எம்எல்ஏக்களின் நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. எஸ்.பி.வேலுமணி, சி,.வி. சண்முகம் தலைமையிலான குழுவில் அதிகப்படியான எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறப்படுவதால், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இன்று காலை சட்டமன்றத்துக்கு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு குழுவாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு குழுவாகவும் தனித்தனியாக வந்தனர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

எடப்பாடி பழனிசாமிக்கு 17 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ள தகவல் உறுதியாகும் பட்சத்தில், அவர் அதிமுக சட்டமன்ற குழு தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் சிக்கல் ஏற்படலாம். வரும் நாட்களில் அதிமுகவில் இந்த அதிகாரப் போட்டி மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *