முதல்வர் விஜய்யை புகழ்ந்து தள்ளிய பிரேமலதா!…

சென்னை:
தமிழ்நாடு சட்டசபையில் 2-ம் நாள் அமர்வு இன்று கூடியது. அப்போது சட்டசபையில் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் பதவியேற்றுக்கொண்டார்.

துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.புதிதாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகருக்கு எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதனைதொடர்ந்து அவையில் உள்ளோர் தன கருத்தை முன்வைத்தனர்.

அப்போது, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவைக்கு வணக்கத்தை தெரிவித்து, இந்த அவை மாண்புமிகு அவை, முன்னாள் முதலமைச்சர்கள் சிறப்பாக ஆட்சி செய்துள்ளனர் என்றும் இன்றய முதல்வர் அன்பு தம்பி விஜய்க்கு திரையுலகில் அண்ணாக விளங்கியவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் என்றும் கூறினார்.

மேலும் இந்த சபையில் நடக்கும் அணைத்து விஷயங்களும் தமிழக மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இதே அவையில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டபோது கேப்டின் விஜயகாந்த் அவர்கள் என்றென்றும் வலியுறுத்துவார் என்றும் அவர் கூறியது போல் சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வையும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் அணைத்து தரப்பு வாதங்களையும் சரிசமமாக காட்சிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த தமிழ்நாடும் தமிழகமும் என்றும் சிறப்புமிக்கதாக இருக்கவேண்டும் ஆதலால் தமிழ்நாட்டில் இனி நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்க வேண்டும் எனவும் பிறகே மற்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைத்தார்.

அதுமட்டுமல்லாது, முதலமைச்சர் விஜய் அவர்கள் நேற்று அணைத்து எதிர் காட்சிகளையும் நேரடியாக சென்று சந்தித்தது குறித்தும் புகழ்ந்தார்.

அவர் கூறியதாவது, ‘இங்கு எதிர் காட்சிகள் எதிரிக்கட்சிகள் அல்ல, அனைவரும் தோழமை கட்சிகள் தான்’ என்பதை மிக சிறப்பாக செய்து காட்டிய முதல்வர் அன்புத் தம்பி விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது இந்த அவை தமிழ் நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டவேண்டும் என்பாதையும் தெரிவித்தார்.


மேலும் நாளை நடக்க இருக்கும் பெரும்பான்மையிலும் அன்புத் தம்பி விஜய் அவர்கள் வெற்றி பெற்று மிக சிறப்பாக நம்நாட்டிற்கு பணியாற்ற வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொண்டார்.


இறுதியாக தன் அன்புக் கணவர் கேப்டன் விஜய்காந்த் அவர்களின் ஆசிர்வாதத்தோடு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து அவைக்கு நன்றியுரைத்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *