இஷான் கிஷனுக்கு ரூ.1 கோடி வழங்கிய பீகார் முதல்வர்…

அமகதாபாத்;
அமகதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி 3-வது முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

டி20 உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன் 2007, 2024-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.

தொடர்ச்சியாக 2 முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையையும் புரிந்தது. அத்துடன், போட்டியை நடத்திய நாடுகளில் முதல் தடவையாக கோப்பையை வென்ற நாடு எனவும் இந்தியா சாதனை படைத்தது.


இந்நிலையில், பீகார் முதல் மந்திரி சாம்ராட் சவுத்ரி, டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இஷான் கிஷனுக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை இன்று வழங்கி கவுரவித்தார்.

டி20 உலகக் கோப்பையில் இஷான் கிஷன் 317 ரன்கள் எடுத்திருந்தார். இறுதிப்போட்டியில் 54 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *