துபாய்:
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டது.
இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 791 புள்ளிகளுடன் தொடர்ந்து ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறார்.
சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர்ச்சியாக சதங்களை விளாசினார்.
இங்கிலாந்தின் நாட் சீவர்-புருன்ட் 731 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 713 புள்ளியுடன் 3வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் 4வது இடத்திலும் உள்ளனர்.
பவுலர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 6வது இடத்தில் நீடிக்கிறார். டாப் 10-ல் இடம்பிடித்தவர் இவர் மட்டுமே.