உத்தரப் பிரதேசத்தில் சூறாவளிக்காற்றுடன் பருவம் தவறி பெய்து வரும் கனமழையால் 111 பேர் உயிரிழப்பு!!

உத்தரப்பிரதேசம்;
உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் பருவம் தவறி பெய்து வரும் கனமழையால் 111 பேர் உயிரிழந்துள்ளனர்.


அங்கு மொத்தம் 26 மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. மேலும் 72 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புயலால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து, மின் கம்பங்கள் சேதம் அடைந்தது. இதனால் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


வீடுகள், கட்டிடங்கள், உடைமைகள், உள்கட்டமைப்புகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பரைலி, பிரயாக்ராஜில் அதிக சேதங்கள் பதிவாகியுள்ளன.


மணிக்கு 74 முதல் 130 kmph வேகத்தில் காற்று வீசி வருகிறது. மேலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் புழுதிப் புயலும் அங்கு மக்களை அச்சுறுத்தி வருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், உயிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *