திமுக – அதிமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக என்னிடம் யாரும் பேசவில்லை….. ஆனால், அது தொடர்பாக பல இடங்களில் கிசுகிசுப்பாக பேசப்பட்டது – மனம் திறந்த திருமாவளவன்!!

சென்னை:
“சமூக நீதி மண், பெரியார் மண் என்று சொன்னாலும் தமிழகம் சாதிய இறுக்கத்திலிருந்து இன்னும் விடுபடாத மாநிலம். இங்கே அவ்வளவு இலகுவாக தலித் முதல்வராக முடியாது.

திமுக – அதிமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக என்னிடம் யாரும் பேசவில்லை. ஆனால், அது தொடர்பாக பல இடங்களில் கிசுகிசுப்பாக பேசப்பட்டது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுக – அதிமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக என்னிடம் யாரும் பேசவில்லை.

ஆனால், அது தொடர்பாக பல இடங்களில் கிசுகிசுப்பாக பேசப்பட்டது என்றுதான் சொன்னேன். தனிநபர்கள் யாரும் என்னுடன் இதுபற்றி பேசவில்லை.

எனக்கு இதுபற்றி தகவல்கள் வந்தபோது, இப்படிப் பேசுவதே தவறு என்றுதான் சொன்னேன்.

இன்னமும் நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். அதனால் திமுக தலைவரை எப்போது வேண்டுமானாலும் சந்திப்போம்.

தவெக ஆட்சியமைக்க மட்டுமே நாங்கள் ஆதரவளித்துள்ளோம். இரு எம்எல்ஏக்களால் ஆட்சியமைய முடியாமல் போய்விடக் கூடாது, குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது, மறுபடியும் ஒரு தேர்தல் வந்துவிடக் கூடாது என்பதால் நாங்கள் ஆதரவளித்தோம்.

விசிக ஆதரவு அளிக்காததால் தவெகவால் ஆட்சியமைக்க முடியாமல் போய்விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆதரவளித்தோம்.

வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம், அமைச்சரவையில் பங்கு பெற மாட்டோம் என ஏற்கெனவே சொல்லிவிட்டோம்.

எங்கள் கட்சியின் சில தலைவர்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என இப்போதும் பேசிக் கொண்டுள்ளார்கள். ஆனாலும், கட்சியின் தலைவராக நான் எடுத்த முடிவை அனைவரும் ஏற்பார்கள்.

திமுக – அதிமுக கூட்டணி குறித்து இடையில் உள்ள சிலர் என்னிடம் பேசினர். ஆனால், இந்தக் கூட்டணி குறித்து சம்மந்தப்பட்ட கட்சிகளிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக யாரும் என்னிடம் பேசவில்லை.

ஏன் ஒரு தலித் முதல்வராகக் கூடாது என சில நலம்விரும்பிகள் என்னிடம் கேள்வியெழுப்பினர். இது சரியான அணுகுமுறை இல்லை என நாங்கள் சொல்லிவிட்டோம்.

திமுக கூட்டணியில் இருந்தாலும், தவெக ஆட்சியமைப்பதில் தவறில்லை என்ற நிலைப்பாட்டை நாங்கள் தொடக்கத்திலேயே எடுத்துவிட்டோம்.

இடதுசாரிகள் அறிவித்தவுடனே நீங்கள் ஏன் அறிவிக்கவில்லை என்கிறார்கள்.

எங்கள் கட்சிக்குள் உயர்நிலைக் குழுவில் விவாதம் செய்தே முடிவை அறிவித்தோம். தவெகவுடன் நாங்கள் எந்த பேரமும் நடத்தவில்லை என்பதே உண்மை.

சமூக நீதி மண், பெரியார் மண் என்று சொன்னாலும் தமிழகம் சாதிய இறுக்கத்திலிருந்து இன்னும் விடுபடாத மாநிலம். இங்கே அவ்வளவு இலகுவாக தலித் முதல்வராக முடியாது.

நான் 40 ஆண்டுகள் அரசியலில் உள்ளேன், இங்கே கள யதார்த்தம் என்னவென்று எனக்கு தெரியும். எனவே யாரோ சொன்னார்கள் என்பதற்காக கற்பனையாக நான் வாழ மாட்டேன்.

எங்களுக்கு பதவி ஆசை இருந்தால், நான் காங்கிரஸுக்கு முன்பே தவெகவுக்கு ஆதரவளித்திருப்பேனே?. ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளைகள் விஜய்யும், சீமானும் என்று நான் தேர்தலின் போது விமர்சனம் வைத்தேன். ஆதரவளிக்கும் போதும் அதனை நான் ஆதவ் அர்ஜுனாவிடம் சொன்னேன்.

அதிமுகவை ஊழல் கட்சி என விஜய் சொன்னார். அதிமுக இப்போதும் பாஜகவோடு தீவிர நட்போடு இருக்கிற கட்சி.

அந்தக் கட்சியை சார்ந்த சிலர், அந்தக் கட்சியை உடைத்துக்கொண்டு தவெக அரசுக்கு ஆதரவு தருவது குறித்து, எங்கள் கட்சியின் உயர்நிலைக் குழுவில் கலந்து பேசுவோம்” என்று கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *