உணவுத் துறை செயலராக அமுதாவும், நகராட்சி நிர்வாகத் துறை செயலராக ககன் தீப் சிங் பேடியும் நியமனம்!!

சென்னை:
உணவுத் துறை செயலராக அமுதாவும், நகராட்சி நிர்வாகத் துறை செயலராக ககன் தீப் சிங் பேடியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியமைந்தது முதல் பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இன்று பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நகராட்சி நிர்வாகத் துறை செயலராக ககன் தீப் சிங் பேடியும், கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலராக அமுதாவும், நீர்வளத்துறை செயலராக சத்யபிரதா சாஹுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பொதுப்பணித் துறை செயலராக சுஞ்சோக்னாம் ஜடக் சிரு, மின்சாரத் துறை செயலாராக அனில் மேஷ்ரம், போக்குவரத்துத் துறை செயலராக வள்ளலார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலராக கே.எஸ்.பழனிசாமி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலராக தெட்சிணாமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலராக சஜ்ஜன் சிங், பதிவுத் துறை ஐஜியாக அருண் சுந்தர் தயாளன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலராக பிரசாந்த் எம் வட்னரே, வருவாய் துறை இணைச் செயலராக லட்சுமிபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி ஆணையராக ஜி.எஸ்.சமீரன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய நிர்வாக இயக்குநராக டி. ஆனந்த், சிஎம்டிஏ உறுப்பினர் செயலராக ராகுல் நாத், மகளிர் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநராக எம்.ஆர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரிய நிர்வாக இயக்குநராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *