பிரேமலதாவுக்காக தொகுதி தேடும் தேமுதிக!! மதுரை மத்தியா? – அருப்புக்கோட்டையா…

விறுவிறு விஜய், சிணுங்கும் சீமான், அடிதடி அதிமுக, திட்டு திமுக, விக்கல் விசிக, பாயும் பாமக, பழிக்கும் பாஜக என அனைத்துக் கட்சிகளையும் தேர்தல் ஜுரம் பற்றிக்கொண்டுவிட்ட நிலையில் தேமுதிகவும் தேர்தல் ஜுரத்துக்கு மருந்து தேடும் வேலையில் இறங்கி இருக்கிறது.

கேப்டன் இல்லாத தாக்கம் தெரியாத அளவுக்கு தன்னால் முடிந்​தவரைக்கும் கட்சியை தூக்கி நிறுத்தும் வேலைகளில் மெனக்கிட்டு வருகிறார் தேமுதிக பொதுச்​செய​லாளர் பிரேமலதா விஜயகாந்த்.

அந்த வகையில், கட்சியின் பலத்தை பொறுத்து எங் கெல்லாம் சிறப்புக் கவனமெடுத்து வேட்பாளர்களை நிறுத்துவது என்பதற்கான கள ஆய்வு இப்போது தேமுதிக வட்டாரத்தில் நடந்துகொண்​டிருக்​கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய தென் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் சிலர், “இம்முறை தென்மாவட்​டங்​களில் அதிகமான இடங்களில் போட்டி​யிடும் திட்டத்தில் தலைமை இருக்​கிறது. அதற்கேற்ப, கூட்ட​ணிக்கு தலைமை வகிக்கும் கட்சி​யிடம் தொகுதிகளை கேட்டுப் பெறவும் திட்ட​மிடு​கிறார் பிரேமலதா.

குறிப்பாக, மக்களவைத் தேர்தலில் நூலிழையில் வெற்றி​வாய்ப்பை இழந்த விருதுநகர் மாவட்​டத்தில் அருப்​புக்​கோட்டை உட்பட 2 தொகுதி​களிலும் மதுரை​யில், மதுரை மத்தி உள்ளிட்ட 2 தொகுதி​களிலும் இம்முறை தேமுதிக போட்டி​யிடும். பிரேமலதாவை அருப்​புக்​கோட்​டையில் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அங்கு இல்லா​விட்டால் அவர் மதுரை மத்திய தொகுதியில் போட்டி​யிடலாம்.

விஜய பிரபாகரன் சட்டமன்றத் தேர்தலுக்கு வரமாட்​டார். அவர் மீண்டும் மக்களவைத் தேர்தலில் அதே விருதுநகரில் தான் போட்டியிட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்​கிறார். மற்ற கட்சிகளைப் போலவே, 234 தொகுதி​களுக்கும் தேர்தல் பொறுப்​பாளர்கள் நியமனம் குறித்த பட்டியல் ரெடியாகிறது.

இம்முறை மாவட்டச் செயலா​ளர்களே தேர்தல் பொறுப்​பாளர்களை தேர்வு செய்து தலைமைக்கு அனுப்பி வருகிறார்கள். ஜனவரியில் தேமுதிக பொதுக்குழு கூடுகிறது.

அப்போது விஜய பிரபாகரனுக்கு மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்​படலாம். அதற்கு முன்னதாக, கேப்டன் மறைவு தினத்​தையொட்டி, டிசம்​பரில் சென்னையில் பிரம்​மாண்டமான அமைதிப் பேரணியை நடத்தவும் திட்ட​மிடப்​பட்​டுள்ளது. பொதுமக்​களின் பிரச்​சினைகளை கையிலெடுத்து போராட்​டங்களை நடத்து​வதற்கும் தலைமை எங்களுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்​துள்ளது.

கட்சியின் முக்கிய பொறுப்​பாளர்கள் அவரவர் பகுதி​யிலேயே அலுவல​கங்களை திறந்து மக்களின் பிரச்​சினை​களைக் கேட்டு அவற்றை தீர்த்து​வைத்து அபிமானத்தைப் பெறவும் தலைமை அறிவுறுத்​தி​யுள்ளது.

புதிதாக தேமுதிகவில் இணைய நினைப்​பவர்களுக்கு வசதியாக அந்தந்த மாவட்​டங்​களிலேயே உறுப்​பினர் சேர்க்கை முகாம்களை நடத்தவும் திட்டமிடப்​படு​கிறது” என்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் முத்துப்​பட்டி மணிகண்டன், “கேப்​டனின் மறைவால் ஏற்பட்ட அனுதாப அலையால் தேமுதி​க​வுக்கு செல்வாக்கு முன்பைவிட கூடியிருக்​கிறது.

ஆகவே, 2026 தேர்தல் எங்களுக்கு நிச்சயம் திருப்பு​முனையாக அமையும். அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே தலைமை எங்களுக்கு வழிகாட்​டல்களை வழங்கி வருகிறது.

நிச்சயம் இந்தத் தேர்தலில் நாங்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருப்​போம்” என்றார். ஆளாளுக்கு ஒரு ​திட்​டத்தோட தான் இருக்​காங்​கப்பா!

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *