திருப்பதியில் 3 கி.மீ. வரிசையில் காத்திருந்த பக்தர்கள்…

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப் படுகிறது. கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் குறையாமல் உள்ளது.

இதனால் பக்தர்கள் தங்கி தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் அறைகள் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். திருப்பதி மலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

காத்திருப்பு அறைகளை தாண்டி இன்று கோகர்ப்பம் அணை சந்திப்பு வரை சுமார் 3 கிலோமீட்டர் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

நேரடி இலவச தரிசத்தில் 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் நேற்று 86,315 பேர் தரிசனம் செய்தனர். 44,107 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ரூ.3.94 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் தங்கும் அறை கிடைக்காமல் அவதியடைந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *