254 ரன்கள் குவித்த ஆர்சிபி!!

தரம்சாலா:
நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் 254 ரன்கள் குவித்துள்ளது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி. அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் அதிரடியாக ஆடி ரன் குவித்தார்.

இந்த ஆட்டம் இமாச்சலில் உள்ள தரம்சாலாவில் நடைபெற்றது வருகிறது. இதில் டாஸை இழந்த ஆர்சிபி அணி, முதலில் பேட் செய்தது.

அந்த அணிக்காக வெங்கடேஷ் ஐயர் மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். 7 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து வெங்கடேஷ் வெளியேறினார்.

அதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த கோலி, தேவ்தத் படிக்கல் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது ஆட்டத்தில் ஆர்சிபி ஆதிக்கம் செலுத்தியது.

அந்த சூழலில் ஒரே ஓவரில் அவர்கள் இருவரது விக்கெட்டையும் குஜராத் வீரர் ஜேசன் ஹோல்டர் கைப்பற்றினார்.

தொடர்ந்து களத்துக்கு வந்த ஆர்சிபி கேப்டன் பட்டிதார் மற்றும் க்ருணல் பாண்டியா இணைந்து 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

க்ருணல் பாண்டியா, 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 4 ரன்கள் எடுத்தார்.

பட்டிதார் விளாசல்: இறுதிவரை களத்தில் இருந்த பட்டிதார், 33 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். ஜிதேஷ் 15 ரன்கள் எடுத்திருந்தார்.

20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 255 ரன்களை குஜராத் அணி எடுக்க வேண்டும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *